Published:Updated:

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

Published:Updated:

வாசகர்களே! 

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

இறைவனுக்கு செய்ய நினைத்த நேர்த்திக்கடனை பெற்றோர்கள் செய்ய முடியாவிட்டால், அதனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள் !

பிள்ளைகளைக் கொண்டு நிறைவேற்றலாமா? விவரம் தெரிந்த சான்றோர்கள் எனது குழப்பத்தைத் தீர்த்து வைத்தால் பெரிதும் மகிழ்வேன்.

 - எம்.செல்லையா, சாத்தூர்

இறைவனுக்கான நேர்த்திக்கடனை, சூழ்நிலையின் காரணமாக பெற்றோர்கள் நிறைவேற்ற முடியாவிட்டால், அந்தப் பரம்பரை யில் வரும் வாரிசுகள் நிறைவேற்றுவதுதான் உத்தமம். அப்போதுதான், அந்த வம்சத்துக்கான பிரார்த்தனை நிறை வேறும். அதன் மூலமாக, பாவங்களில் இருந்தும் சிக்கலில் இருந்தும் அந்தக் குடும்பத்தினர் எளிதாக விடுபட முடியும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது குடும்பத்துக்கு மிகவும் நல்லது.

மாறாக, பெற்றோர் விட்டுச் சென்ற நேர்த்திக்கடனை, பிள்ளைகள் நிறைவேற்றா விட்டால், அந்தப் பாவம், பரம்பரை பரம்பரையாக தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழப்பங்கள் மற்றும் சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துக் கொண்டே வரும். அதனால், பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும், அதனை வாரிசு தாரர்கள் தாராளமாக நிறைவேற்ற வேண்டும். அது கடமையும்கூட.

உதவலாம் வாருங்கள் !

'வள்ளிக் கணவன் வரை’ எனும் கிளிக்கண்ணி மெட்டில், பகவான் ஸ்ரீரமண மகரிஷி மீது 'வள்ளல் ரமணன் பேரை’ என்னும் பாடலைக் கேட்டிருக்கிறேன். தற்சமயம் அந்தப் பாடல் முழுவதும் சரியாக நினைவுக்கு வராததால், முழுவதும் தெரிந்த வாசகர்கள் அனுப்பி வைத்தால் பெரிதும் மகிழ்வேன்.

 - வி.கே.ராஜாராமன், மைசூர்

ஸ்ரீவேங்கடேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் விளக்கவுரையுடன் தமிழில் வெளிவந்திருந்தால், எந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள் என்பதை விவரம் தெரிந்த வாசகர்கள் தெரிவித்தால், வாங்கிப் படிக்க உதவியாக இருக்கும்.

 - கே.குணசேகரன், சேலம்

ஸ்ரீசரஸ்வதிக்கு 'திரிசதி’ நாமாவளி உண்டா? அப்படி இருந்தால், சக்தி விகடன் வாசகர்கள் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.

ஆர்.சித்ரலேகா, சென்னை

நான் 'வாதூல கோத்திர’த்தைச் சேர்ந்தவன். அதனால், வாதூல மகரிஷியின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இது குறித்து 'உதவலாம் வாருங்கள்’ பகுதி மூலம் சக்தி விகடன் வாசகர்கள் யாராவது உதவிக்கரம் நீட்டினால் பெரிதும் உதவியாக இருக்கும்.  

- ஆர்.வெங்கடராமன், நாதகடையூர்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

** சக்தி விகடன்  27.10.15 தேதியிட்ட இதழில், தில ஹோமம் பற்றி  மொளசி வாசகர் கோகுல்நாத் கேட்டிருந்தார்.

'ஜாதகத்தில் சிலருக்கு பிதுர் தோஷம் காணப்படும். பிதுர்க்களுடைய சாபத்தால் ஏற்படும் இந்த

உதவலாம் வாருங்கள் !

தோஷம் வம்சத்தைப் பாதிக்கும். இதனைப் போக்க சம்பந்தப்பட்டவருடைய பெயர் மற்றும் கோத்திரத்தை சங்கல்பம் செய்து, எள்ளினால் செய்யப்படும் ஹோமம் தில ஹோமம் ஆகும். இதை வீடுகளில் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்கிறார்கள். அதனால், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள ஆதி சேது, பேரளத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணபுரி ஆகிய இடங்களில் இந்த ஹோமத்தைச் செய்து பரிகாரம் செய்வது உத்தமம். இதைச் செய்தால் நம் குடும்பத்தில் ஏற்படும் காரியத்தடை, திருமணத்தடை, வாரிசுகளுக்கு குழந்தையின்மை, மன உளைச்சல் போன்றவை அகலும் என்பது சாஸ்திரம் என்று சென்னை  வாசகர் டி.கே.தேவநாதன், ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

** சக்தி விகடன்  27.10.15 தேதியிட்ட இதழில், வெ.ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதிய, லலிதா  ஸஹஸ்ரநாமத்தின் தமிழாக்க உரை கொண்ட புத்தகம் குறித்து சென்னை வாசகர், ஆர்.ராஜகோபாலன் கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட அந்தப் புத்தகம், லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிமிடெட், 36, வடக்கு சாலை, மேற்கு சி.ஐ.டி. நகர், சென்னை600035 என்ற முகவரியிலும், கிரி டிரேடிங் ஏஜென்ஸி புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் என்னும் தகவலை தந்து உதவியிருக்கிறார் தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் வாசகர் கோ.முருகதாஸ்.

** சக்தி விகடன் 10.11.15 தேதியிட்ட இதழில், 'கணபதி சதுரவர்த்தி தர்ப்பணம்’ குறித்து ஐதராபாத் வாசகர் ஆர்.ரகுபதி கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு 'கணபதி சதுரவர்த்தி தர்ப்பணம்’ தொடர்பான புத்தகம் சென்னை கிரி டிரேடிங் ஏஜென்ஸியில் கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார் பெங்களூர் வாசகர் ஹரிகரபுத்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism