தெய்வம் தந்த தமிழ்
ஆசிரியர்: முனைவர் மா.கி.இரமணன்
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14. சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-600004
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பக்கங்கள்: 240 விலை: ரூ.150/-
உலகில் எந்த மொழியையும் கடவுள் படைத்ததாகவோ, கடவுளே இலக்கணம் வகுத்து வளர்த்ததாகவோ வரலாறு இல்லை. ஆனால், தமிழுக்கு இத்தகு தனிப்பெருமை உண்டு; வரலாறு உண்டு; சிறப்பும் உண்டு! முதற்சங்கத்தில் சிவபெருமானே தலைமை ஏற்று அமர்ந்து, தானே இலக்கணம் பாடியது முதல், பிற தெய்வங்கள் தந்த அழகிய தமிழையும் சேர்த்து, நூல் முழுமைக்கும் சுவைபட பரிமாறியிருக்கிறார் ஆசிரியர். இது ஒரு தெய்வீகத் தமிழ் விருந்து!

தெய்வீக ரகசியங்கள்
தொகுப்பு: இ.உஷா
வெளியீடு: டிகே பப்ளிஷர்ஸ், 66. 2-வது மெயின் ரோடு, சி.ஐ.டி.நகர், சென்னை-600035
பக்கங்கள்: 72 விலை: ரூ.35/-
பூஜை, ஜெபம், ஹோமம், பாராயணம், ஆலய வழிபாடு போன்ற ஆன்மிக செயல்களை எப்போது, எங்கே, எவ்வாறு, எதற்கு செய்ய வேண்டும் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்ற எண்ணத் துடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஆன்மிக செயல்பாடுகளை எப்படிவேண்டுமானாலும் செய்யலாம் என்பவர்களுக்கு, ‘செய்வன திருந்தச் செய்’ என்று வலியுறுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயன் தரும்.
ஸ்ரீஹரி வம்சம்
ஆசிரியர்: எல்.லஷ்மி நரசிம்மன்
வெளியீடு: அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோயில் தெரு,
திருமலா ஃப்ளாட்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-600005
பக்கங்கள்: 320 விலை: ரூ.250/-
வேத வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீஹரி வம்சம் மஹாபாரதத்தோடு தொடர்புடைய நூலாகத் திகழ்கிறது. சுமார் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட இந்த நூலில் ஸ்த்ரீ புருஷ ஜீவ தத்துவம், ஸ்ருஷ்டி விவரணம், கால நிர்ணயம், தேவதா தாரதம்யம் முதலான ஏராளமான தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன. அவைகளை அனைவருக்கும் பயன்படும் வகையில் எளியமுறையில் விளக்கி இருப்பதுடன், பல விதமான சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய முயற்சி.
ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் சி.டி.-கள் குறித்த விமர்சனங்கள்/தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற, இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும். முகவரி: சக்தி விகடன், (விமர்சன பகுதி), 757 அண்ணா சாலை, சென்னை-2