Published:Updated:

உதவலாம் வாருங்கள் !

வி.ஐ.பி பதில்கள்

உதவலாம் வாருங்கள் !

வி.ஐ.பி பதில்கள்

Published:Updated:

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

* வீட்டில் வைத்து வழிபாடு செய்ய மணோன்மணியம்மன் படம், லக்ஷ்மி கணபதி படம் இரண்டும்

உதவலாம் வாருங்கள் !

தேவைப்படுகிறது. சக்தி விகடன் வாசகர்களிடம் இருந்தால், அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- கே.எஸ்.சேவக மூர்த்தி, மேலூர்

* நான் கடந்த 30 வருடங்களாக சுந்தர காண்டமும், கீதையும் படித்து வருகிறேன். இப்போது நாராயண கவசம் 44 ஸ்லோகத்துக்கும், தமிழ் அர்த்தம் படிக்க விருப்பமாக உள்ளது. தமிழ் அர்த்தம் வைத்திருக்கும் சக்தி விகடன் வாசகர்கள் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறறேன்.

- எம்.பிரேமா, சென்னை - 42

* புன்னாக கௌரி விரதம் கடைப்பிடித்தால் நோய்கள் நீங்கும். அதுபோன்று வடசாவித்திரி விரதம் - தீர்க்க சுமங்கலி யோகம் அருளும்; கோகிலா விரதம் - குரல் வளம் தரும்; சம்பத் கௌரி விரதம் - வீட்டில் செல்வம் சேர்க்கும் என்பார்கள். இந்த  நான்கு விரதங்களை மேற்கொள்வதற்கான விரத நியதிகளை அறிந்த வாசகர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன். அல்லது அதுபற்றிய புத்தகங்கள் கிடைக்கும் எனில், எங்கு கிடைக்கும் என்ற விவரம் தெரிவியுங்களேன்.

- ஆர்.தேவகி வாசுதேவன், சென்னை

* ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமாக்களின் சார்பாக எழுதப்பட்ட ‘ஸ்ரீவிஷ்ணு தர்மோத்திரம்’ என்னும் தமிழ் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தேவை. அல்லது அந்த புத்தகம் வைத்திருப்போர், ஒரு நகல் எடுத்து அனுப்பினால் பெருதும் மகிழ்வேன்.

- டி.கே.ஜெயபாலன், மதுரை

உதவிக்கரம் நீட்டியவர்கள்

* சக்தி விகடன்  10.11.15 தேதியிட்ட இதழில், ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திர மாலா பற்றிய புத்தம் அல்லது சி.டி தேவைப்படுவதாக நாமக்கல் வாசகி இரா.மாணிக்கவாசவி கேட்டிருந்தார்.

இதைப் படித்துவிட்டு ‘ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரமாலா’ என்னும் புத்தகத்தை திருச்சி வாசகி சரோஜா சுதர்சன் அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகம் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* சக்தி விகடன் 27.10.15 தேதியிட்ட இதழில், வினு அவர்கள் வரைந்த ஜெய அனுமன் வண்ணப் படத்தை பிரசுரித்து இருந்தோம். அதனைத் தொடர்ந்து, சென்னை வேலப்பன்சாவடி வாசகி ஆர்.கஸ்தூரி ராமமூர்த்தி உட்பட பல்வேறு வாசகர்கள் சக்தி விகடனைத் தொடர்பு கொண்டு தங்களுக்கும் வினு அவர்கள் வரைந்த வண்ணப்படம் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

வினு அவர்கள் வரைந்த குறிப்பிட்ட ஜெய அனுமன் வண்ணப்படம், ஸ்ரீமாருதி நற்பணி மன்றம் மூலம் விநியோகிக்கப் படுகிறது. படம் தேவைப்படுவோர் 9791355593-9677078131 மற்றும் 9443252670 என்ற எண்களில் தொடர்புகொண்டு பெற்று கொள்ளாலாம் என்று தெரிவித்திருக்கிறார், வினு அவர்களின் உறவினர் பாலசுப்பிரமணியன்.

உதவலாம் வாருங்கள் !

* சபரிமலையில் ஐயப்பன் தரிசனம் முடிந்த பிறகு, பம்பை ஆற்றங்கரையிலேயே மாலையைக் கழற்றி விடலாமா? விவரம் அறிந்த சான்றோர் பெருமக்கள் பதில் தாருங்களேன்.

- ஆர்.பழனியப்பன், புனல்வாசல்

சபரிமலைக்கு நாம் கிளம்பும்போது, வீட்டில் தேங்காய் உடைத்துவிட்டுதான் கோயிலுக்குச் செல்ல முற்படுகிறோம். அதன் தாத்பரியமே, நமது வீட்டில் கருப்பண்ணசாமி துணையாக இருப்பதாக ஐதிகம். அதனால், சபரிமலையில் ஐயப்பன் தரிசனம் முடிந்ததும், வீட்டுக்கு வந்து மீண்டும் தேங்காய் உடைத்து, இருமுடிக்கு பூஜை செய்த பிறகுதான் மாலையைக் கழற்ற வேண்டும்.

* ஐயப்பனுக்கு மாலை போடும் சாமிமார்கள் வெங்காயம், பூண்டு போன்ற உணவுப்  பொருட்களை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லப்படுகிறதே. உண்மையா? ஐயப்பனின் அருள் பெற்ற குருசாமி மார்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும்.

- பி.தியாகராஜன், வீரையன்கோட்டை

மாலை அணிந்து விரதம் இருக்கும் அந்த 48 நாட்களுமே உடல் தூய்மையும் மனத்தூய்மையும்

உதவலாம் வாருங்கள் !

அவசியம். அதேபோல் உணவுக் கட்டுப்பாடும் மிக அவசியம். பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வழக்கமாய் உணவில் சேர்க்கப்படும் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும். முக்கியமாக பூஜை மற்றும் அன்னதானத்துக்கு தயாரிக்கப்படும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பது, மிகப் பெரிய பாவம்.

இந்த இரண்டு உணவுப் பொருட்களுமே உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருப்பதால், நமது முன்னோர்கள் இதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். அதேபோல், உணர்ச்சியைத் தூண்டும் பிற உணவு பொருட்களையும் தவிர்ப்பதும் அவசியம்.  மாலை போட்டு விரதம் இருக்கும் நாட்களில், நாம் முழுமையாக பிரம்மசரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் தாத்பரியம்.

- சாஸ்தா தாசன்