Published:Updated:

புதிர் வட்டம்!

ம.மாரிமுத்து

புதிர் வட்டம்!

ம.மாரிமுத்து

Published:Updated:

ங்கே 7 கேள்விகள் உள்ளன. இவற்றுக்கான விடைகள் இந்த இதழில் ஆங்காங்கே உள்ள புதிர் வட்டத்தில் கலைந்துள்ளன. ஒவ்வொன்றையும் ஒழுங்குபடுத்தினால் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய சரியான பதில் கிடைக்கும். இவ்வாறு அத்தனை பதில்களையும் கண்டுபிடித்தபின், அவற்றை எடுத்து தனியே எழுதிக்கொள்ளுங்கள். 

ஒவ்வொரு கேள்விக்கும் கீழே, எந்த எழுத்து நமக்குத் தேவையானது என்ற குறிப்பு அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.அந்தக் குறிப்பிட்ட எழுத்துக்களைச் சேகரித்து வரிசைப்படுத்தினால், வைணவ அடியாரின்  திருப்பெயர் ஒன்று கிடைக்கும். அதைக் கீழ்க்காணும் கட்டத்தில் எழுதி அனுப்புங்கள். இனி கேள்விகள்...

புதிர் வட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. சிலப்பதிகாரத்தில் கோவலனின் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நெடுஞ்செழிய பாண்டியனின் மனைவியின் பெயர் என்ன?

(முதல் எழுத்து)

2. நரை எய்தாமல் இருந்த சங்க காலப் புலவர் யார்?

(ஐந்தாவது எழுத்து)

3. சங்கத் தமிழ்நூல்களில் ஒரு எட்டுத் தொகை நூல்!

(மூன்றாவது எழுத்து)

4. கள்ளழகர் வைகையில் இறங்கும்போது, இந்த உடை தரித்தால் ஊர் செழிக்கும் என்பது ஐதீகம். அது எது?

(இரண்டாவது எழுத்து)

5. நள்ளிரவுப் பொழுதை இப்படியும் குறிக்கலாம்!

(நான்காவது எழுத்து)

6. குரு பகவானின் மற்றொரு பெயர்?

(இரண்டாவது எழுத்து)

7. திருவாசகத்தை எழுதியவர் யார்?

(எட்டாவது எழுத்து)

விடை:    _______________________________________________________

சிறப்புக்கேள்வி: விடையாகக் கிடைக்கும் அடியார் குறித்து, உங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை நறுக்கென ஒரே வரியில் எழுதி அனுப்புங்கள்.போட்டிக்கான விதிமுறைகள்:

போட்டிக்கான விதிமுறைகள்:

* இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

* சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமான பதிலை அனுப்பும் பத்து வாசகர்களுக்கு   தலா 300 ரூபாய் பரிசாக வழங்கப்படும். விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய

கடைசி தேதி 29.12.15.

* விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

* ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்  புதிர் வட்டம் பகுதி, 757, அண்ணா சாலை,  சென்னை - 600 002.

சென்ற புதிர் போட்டியின் விடைகள் மற்றும் பரிசு பெற்றோர்கள் விபரம்:

புதிர்ச் சுவடி!

விடை: பகவத்கீதை

சக்தி விகடன் 22.12.15 தேதியிட்ட இதழில், புதிர்ச் சுவடி பகுதிக்கு சரியான விடையும், கேட்கப்பட்ட சிறப்புக் கேள்விக்குக் கச்சிதமான பதிலும் எழுதி தலா ரூ.300 பரிசு பெறும் வாசகர்களின் விவரம்...

1. எஸ்.காஞ்சனா, சென்னை

2. எஸ்.வைதேகி, வாலாஜாபேட்டை

3. ஜி.பாரதி, நெல்லிக்குப்பம்

4. ஜோதியம்மாள், தருமபுரி

5. ஆர்.ஜி.மோனிதா, புதுச்சேரி

6. மங்கை ரகுநாதன், நாமக்கல்

7. ஆர்.கங்கா, ஏ.வி.கோட்டை

8. எச்.உமாமகேஸ்வரி, அரசரடி

9. சி.கார்த்திகேயன், சாத்தூர்

10. ஜெ.சந்தோஷ், ஸ்ரீரங்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism