Published:Updated:

புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்

புத்தக விமர்சனம்

Published:Updated:

சைவ சமய சந்தானக் குரவர்கள்

ஆசிரியர்: கௌரி ராஜகோபால் வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை1-4.

விலை: 120    பக்கங்கள்: 94    
 
சிவபெருமானை நேரில் தரிசித்து அகம் நெகிழ்ந்து, அவரது பெருமையைத் தோத்திரங்களாக அருளியவர்கள் சமயக் குரவர்கள். சைவ சித்தாந்த சாத்திரங்களை அருளியவர்கள் சந்தானக் குரவர்கள். அப்படிப்பட்ட சந்தானக் குரவர்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டி, அந்த மகான்களின் வாழ்க்கையை வண்ணப் படங்களுடன் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். நல்ல முயற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தக விமர்சனம்


திருவருள் நல்கும் திருமாலின் தமிழகத் திருக்கோயில்கள்

ஆசிரியர்: வி.ஆர்.கிருஷ்ணன்         வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.                  

விலை: 70  பக்கங்கள்: 152

பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் விளங்கும் பரம்பொருளாகத் திகழ்கிறார் திருமால். பாற்கடலில் பள்ளிகொண்டு பாம்பணை மேல் காட்சி தரும் திருமால், வைகுண்டவாசராகத் தோன்றுவது குறித்தும், அரவரசப் பெருஞ்சோதியாம் அநந்தனை ஆசனமாகக் கொண்டு, தம் தேவிகளுடன் அமர்ந்து எழிலாகக் காட்சி தருவது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய நாட்டோடு தொண்டைநாடு, நடுநாடு ஆகிய இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் திருமால் கோயில்கள் குறித்தும் விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...

ஆசிரியர்: அம்மன் சத்தியநாதன்       வெளியீடு: அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோயில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5.       

விலை: 150  பக்கங்கள்: 192

நெஞ்சுக்கு நிம்மதி தந்து, மனதை லேசாக்கும் வாக்கிய நடை. பக்தர்களின் வாழ்வியலைச் சொல்லும் சுவாரஸ்யம், சிலிர்ப்பூட்டும் ஆன்மிக அனுபவக் கதைகள் என மிக நேர்த்தியாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. `நமக்கு மட்டும் ஏன் இப்படி' என்பதற்குப் பதில் சொல்லும் விதமாகப் பல கட்டுரைகள்  இந்நூலில் இடம் பெற்றிருப்பது, நூல் ஆசிரியரின் கடும் உழைப்புக்கும் தேடலுக்கும் சான்று!

புத்தக விமர்சனம்

சபரிமலை சாஸ்தா

பாடியவர்: ‘கலைமாமணி’ வீரமணிராஜு        வெளியீடு: கே.வி.எம்.ஆடியோ, F1-சாய்ராம் அப்பார்ட்மென்ட், 21, ஸ்டேட் வங்கி காலனி 2-வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92.              

விலை: 50

இறை இசைத்தென்றல் கலைமாமணி வீரமணிராஜுவின் தெய்வீகக் குரலில் வெளிவந்திருக்கும் சாஸ்தாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்த ஆடியோ சி.டி-க்கு இசை அமைத்து, டிஜிட்டல் முறையில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார் பிரசாத்கணேஷ். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 பாடல்களுமே ஐயப்ப பக்தர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த சி.டி-யுடன் ஸ்ரீபூர்ணாதேவி ஸ்ரீபுஷ்கலாதேவி சமேத ஸ்ரீஹரிஹரபுத்திர சுவாமி வண்ணப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் சி.டி.-கள் குறித்த விமர்சனங்கள்/தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற, இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும். முகவரி: சக்தி விகடன், (விமர்சன பகுதி), 757 அண்ணா சாலை, சென்னை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism