Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் 'உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம். 

உதவலாம் வாருங்கள்!

ஆகமங்கள், சிவபெருமானுக்கு உரிய 25 வகை சங்குகள் பற்றி விளக்கியிருப்பதாக அறிந்தேன். அதுபற்றி அறிந்த அன்பர்கள், அவற்றின் பெயர் விவரங்களைப் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - மு.இலக்குணப் பெருமாள், திருச்சி.

அங்காரக மூர்த்தியாகிய செவ்வாய் பகவானை துதித்து வழிபட, அவருக்குரிய 'ஸஹஸ்ர நாம ஸ்தோத்திரம்’ எனக்குத் தேவைப்படுகிறது. சக்தி விகடன் வாசகர்கள் அதுகுறித்த தகவலைப் பகிர்ந்தால், எனக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

 - ஸி.கெ.லக்ஷ்மண சர்மா, பாலக்காடு.

'ஈஸ்வரியே...’ என்று துவங்கி 'ஈஸ்வரியே’ என்று முடியும் பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடலைப் பாடி வழிபட விரும்புகிறேன். எனவே, இந்தப் பாடல் முழுமையாக இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்ற விவரம் அறிந்தவர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

 - ஜி.எஸ்.பாலதண்டபாணி, கோபிசெட்டிப்பாளையம்.

வடநாட்டில் ஜபல்பூர் பக்கத்தில், பேடாகாட் என்ற இடத்தில் 64 யோகினிகளுக்கும் ஒரே இடத்தில் கோயில் உண்டு. அதேபோல், தமிழ்நாட்டில் எங்காவது ஒரே இடத்தில் 64 யோகினிகளுக்கு யோகினி பீடங்கள் ஒரே இடத்தில் அல்லது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளனவா? அத்துடன், அந்த 64 யோகினிகளின் பெயர்கள் அல்லது அவை தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தந்து உதவுங்கள்.

 - து.கதிர்வேல் ஸ்வாமிகள், கடலூர்.

சுப்பிரமணியர் விஞ்சை, சடாக்ஷர மாரல், வாராஹி மாலை, கந்தரனுபூதி முதலான துதிகளுடன், குறிப்பிட்ட தெய்வங்களுக்கான பூஜை விவரங்கள்... அங்க நியாசம் மற்றும் கர நியாச மந்திரங்கள் அடங்கிய புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. புத்தகமோ அல்லது புத்தகம் பற்றிய தகவல்கலோ தந்து உதவினால் மகிழ்ச்சியடைவேன்.

 - கே.சுப்பையா, தேனி.

சப்தகரை கண்ட திருத்தலங்களான பர்வத மலை, வில்வாரணி மலை, பூண்டி, சம்பத்கிரி, போரூர், படவேடு, கிண்ணத்தூர் ஆகிய தலங்களுக்குச் செல்வதற்கான வழித்தடங்கள், கோயில் தொடர்பு எண்கள் மற்றும் விவரங்கள் குறித்த புத்தகங்கள் இருப்பின், தந்து உதவுமாறு வேண்டுகிறேன்.

 - சொ.கண்ணப்பன், சென்னை - 85.

வீரேந்திரபாண்டி என்பவர் எழுதிய ’கால ஞான சரிதம்' என்ற நூல், முக்காலத்தையும் கணித்துச் சொல்கின்ற நூலாகும். கடப்பாவில் இருந்து வெளிவந்த இந்நூல், தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்ற தகவலை தந்து உதவினால் பெரிதும் உதவியாக இருக்கும்.

 - கோ.ஞானசேகரன், நாச்சியார்கோவில் பெரம்பலூர் மாவட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சுப்ரபாதம் மற்றும் மதுரகாளியம்மன் பற்றிய பாடல்கள் பல வருடங்களுக்கு முன்பு பெங்களூர் பக்தர்களால் பிரசுரிக்கப்பட்டது. தற்சமயம் புதிய பதிப்புகள் இல்லை. எனவே மதுரகாளியம்மன் பற்றிய பாடல்கள் அடங்கிய புத்தகப் பிரதிகளின் நகல்கள் மற்றும் சி.டி. இருந்தால் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 - க.வெங்கடேசன், திருச்சி.

உதவலாம் வாருங்கள்!

என் கணவரின் சிறு வயதில், அவருடைய தாயார் பாடும் தாலாட்டுப் பாடலில் நான்கு வரிகள் மட்டுமே நினைவில் உள்ளதாகக் கூறி என்னிடம் பகிர்ந்துகொண்டார். எவருக்கேனும் அந்தப் பாடல் முழுமையாக தெரிந்திருந்தால், எழுதி அனுப்புங்களேன்.அந்தப் பாடலின் (கன்னடப் பாட்டு) நான்கு வரிகள் இவைதான்...

'அம்ப பாலிஸே ஜகதம்பலாலிஸே

பெம்பிடாதே ரஜிபிள்ளை

     ஷெம்பு ஷேததி (அம்ப)

உததல்லினா ஷிளுவாதே நின்னொலு

            ஜலததி (அம்ப)

பூர்ண சந்த்ரிகா யதுபூர்ண யதுவிக...’

- டாக்டர் எஸ்.ஷண்மதி, பெங்களூரு.

விநாயகருக்கு உகந்த நாட்களான சதுர்த்தி தினங்களில் கணேச பஞ்ச ரத்தினம், கணேச ஸ்தோத்திரம், கணேசாஷ்டகம் முதலான துதிப்பாடல்களைப் பாடி வழிபட விரும்புகிறேன். அத்துடன் ஆபத்துத்தாரக துர்கா ஸ்தோத்திரமும் தேவைப்படுகிறது. இந்தத் துதிகள் அடங்கிய புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

 - கே. கீர்த்தனா, மேலூர்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

22.12.15 தேதியிட்ட சக்தி விகடன் இதழில்,ஸ்ரீபத்ரகாளி தேவிக்கான 'கட்கமாலா ஸ்தோத்திரம்’ அடங்கிய புத்தகம் தேவைப்படுவதாக பாலக்காடு வாசகர் ஸி.கெ.லக்ஷ்மண சர்மா கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட புத்தகம், சென்னை கிரி டிரேடிங் நிறுவனத்தில் கிடைக்கும் என்ற தகவலைத் தந்து உதவியதோடு, தானே அவற்றை லக்ஷ்மண சர்மாவுக்கு அனுப்பிவைப்பதாக சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த வாசகர் ஏ.வி.சந்திரமௌலி தெரிவித்திருக்கிறார்.

உதவலாம் வாருங்கள்!

சக்தி விகடன் 22.12.15 தேதியிட்ட இதழில், இழந்த பொருட்கள் மீண்டும் கிடைத்திட கார்த்தவீர்யார்ஜுனன் தெய்வத்தை வழிபடுவது குறித்த நியதிகளும், இத்தெய்வம் தொடர்பான இன்னும் பிற தகவல்களும் தேவைப்படுவதாக சேலம் வாசகர் கே.ராதா கிருஷ்ணன் கேட்டிருந்தார்.

இதைப் படித்துவிட்டு, கார்த்தவீர்யார்ஜுனன் தொடர்பான தகவல்களை திருவொற்றியூர் வாசகர் பி.எஸ்.சாயி நடராஜன் அனுப்பி வைத்திருந்தார். குறிப்பிட்ட அந்த பிரதி, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உள்ள சில முக்கிய விவரங்கள் மட்டும் இங்கே உங்களுக்காக...

கார்த்தவீர்யார்ஜுனன் மந்திரம்...

கார்த்த வீர்யார்ஜுனோ நாமா ராஜா பாஹு ஸஹஸ்ரவாந்

தஸ்ய ஸ்மரண மாத்ரேண கதம் நஷ்டஞ்ச லப்யதே

க்ருத வீர்ய ஸீதோ ராஜா ஸஹஸ்ர புஜ மண்டல:

அவதீர்ணோ ஹரீஸ் ஸாஷாத் பாலயேத் ஸகலம் மம

மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் மாகேஷ்மதி நதிக்கரையில் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன்பே அவதரித்தவர் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன். சுதர்சன அம்சமான இவரை, இப்போது அப்பகுதியிலுள்ள மக்கள் இராஜராஜேஸ்வர் என அழைக்கின்றனர். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வேளையில் தேவர்கள் இவருடைய உதவியைக் கோரியதாகக் கூறப்படுகிறது.

வி.ஐ.பி. பதில்கள்

** நாக்கில் கரும்புள்ளி உடையவர்களை அதிர்ஷ்டக்காரர்கள் என்கிறார்களே, உண்மையா?

எம்.கீதா, குடந்தை.

உடலில் கறுப்பு மச்சம் முடியுடன் சேர்ந்து மறைந்து இருந்தால், அந்த நபர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். நாக்கில் கறுப்பு மச்சம் இருந்தால், அவர் சொல்லும் வாக்கு பலிதமாகும். இதனை 'கரிநாக்கு’ என்பார்கள். அம்மாதிரியான நபர்கள் எப்போதும் நல்ல வார்த்தைகளையே பேசுவது நல்லது.

உதவலாம் வாருங்கள்!

** பேர் புகழுடன் மிகப் பிரசித்தி அடையும் யோகம் யாருக்கு உண்டாகும்?

ச.ராஜா, சென்னை.

ஜாதகத்தில் 9ம் இடம் தர்ம ஸ்தானம் ஆகும். 10ம் இடம், கர்ம ஸ்தானம் ஆகும். தர்மாதிபதியும், கர்மாதிபதியும்  ஒன்று கூடி லக்னத்தில் லக்னாதிபதியுடன் சேர்ந்து இருந்தால், அத்தகைய ஜாதகர் மிகவும் பிரசித்தி பெறுவார். பேரும் புகழும் தானாக வந்து சேரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism