பிரீமியம் ஸ்டோரி

ஸ்ரீமத் பகவத்கீதை

ஆசிரியர்: டாக்டர் என்.ஸ்ரீதரன்

வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600017

விலை: ரூ.45                  பக்கங்கள்: 168


பகவத்கீதையில் அர்ஜுன விஷாத யோகம், கர்மயோகம், சந்நியாச யோகம், தியான யோகம் உள்ளிட்ட 18 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள அரிய தத்துவங்களை மிகவும் எளிமையான முறையில் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். நம்முடைய கடமைகளை பற்றில்லாமல் செய்வது எப்படி என்பதை நமக்குத் தெளிவாகச் சொல்லும் பகவத்கீதையை முழுவதும் படிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல் இது.

தனிப்பாடல் திரட்டில் திருமால்

ஆசிரியர்: டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்

வெளியீடு: ஆழ்வார்கள் ஆய்வு மையம், 29, திலக் தெரு, தியாகராய நகர், சென்னை-600017

விலை:  ரூ.70                  பக்கங்கள்: 112


வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது தனிப்பாடல் திரட்டு. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவையெல்லாம் எட்டுத்தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டாலும், அதற்கு முன்னும் பின்னும் இயற்றப்பட்ட தனிப்பாடல்களில் சொல்லப்பட்டிருக்கும் திருமாலின் பெருமைகளை இந்த நூல் விவரிக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.

புத்தக விமர்சனம்

இதுதான் இந்து மதம்

ஆசிரியர் பெயர்: யோகி ஸ்ரீஇராமானந்த குரு

வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017

விலை:  ரூ.290                   பக்கங்கள்: 460


இந்துமதம் மிகவும் தொன்மையான சமயம். அதன் தோற்றம் பற்றி யாராலும் வரையறுத்துச் சொல்லமுடியாது. வேதங்களையும் உபநிஷதங்களையும் அடித்தளமாகக் கொண்டு அமைந்த இந்துமதத்தின் சிறப்புக்களையும், அதன் உட்பிரிவுகளாக ஆதிசங்கரர் வகுத்துத் தந்த காணாபத்யம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ள நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்கு உரியது.

மங்கலம் தரும் மகாமகம்

ஆசிரியர்: தேசியமணி இரா.இராமசாமி

வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017

விலை:  ரூ.30                  பக்கங்கள்: 80


மகாமகம் தொடர்பாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ள பல அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலைத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். மகாமக தீர்த்தத்தின் மகிமைகள் பற்றியும், அந்தத் தீர்த்தத்தில் உள்ள நவநதிகளின் சிறப்புகள் குறித்தும் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான நடையில் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். பாராட்டத்தக்க முயற்சி.

ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் சி.டி.-கள் குறித்த விமர்சனங்கள்/தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற, இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும். முகவரி: சக்தி விகடன், (விமர்சன பகுதி), 757 அண்ணா சாலை, சென்னை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு