Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்!


ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தமிழ் அர்த்தத்துடன் கூடிய புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. அது எங்கு கிடைக்கும் என்ற தகவலை விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- எஸ்.லோகேஸ், ஈரோடு


என்னிடம், நவகிரக மூர்த்திகளுக்கான சத நாமாவளி (108) சம்ஸ்கிருதத்தில் உள்ளது. அவற்றுக்கான தமிழ் அர்த்தம் அறிந்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்த நாமாவளிகள் தமிழில் பொருள் விளக்கத்துடன் கூடிய புத்தகம் எங்கு கிடைக்கும்? தகவல் தெரிந்த வாசகர்கள் தெரிவித்து உதவலாமே.

- கே.எஸ்.பொன்னம்பலம், சென்னை


எனது உறவினரின் பூர்விகம் பழைய வடஆற்காடு மாவட்டம், வேலூர் தொரப்பாடி, பாகாயம் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட ‘தூண் வீடு’ என்று அழைக்கப்பட்ட பகுதியாகும். பணி நிமித்தமாக முன்னோர்கள் 60-70 வருடங்களுக்கு முன்பே வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்துவிட்டதால், தற்போது தங்களின் குலதெய்வம் எது என்று உறவினருக்குத் தெரியவில்லை. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் நபர்கள் எவருக்கேனும் விவரம் தெரிந்திருந்தால், பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- எஸ்.ராஜூ, சென்னை


நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் நிகழ்த்திய ஆன்மிகச் சொற்பொழிவுகள் அடங்கிய ஆடியோ சி.டி தேவைப்படுகிறது. சக்திவிகடன் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

 - வி.ஜெ.ஜானகிராமன், நாகப்பட்டினம்


முருகன் அமர்ந்த நிலையில் தவம் செய்யும் கோலத்தில் இருக்கும் திருக்கோயில் ஏதேனும் தமிழகத்திலோ, வெளி மாநிலங்களிலோ உண்டா? உண்டு எனில், அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனால், பயனுள்ளதாக இருக்கும்.

- பி.செல்லபெருமாள், விருத்தாசலம்


உதவிக்கரம் நீட்டியவர்கள்

** சக்தி விகடன் 16.2.16 தேதியிட்ட இதழில், ‘ஸ்ரீராகவேந்திரர் ஸ்தோத்திர மாலா’ எனும் புத்தகம் தேவைப்படுவதாக காரைக்கால் வாசகர் வி.வைத்திய நாதசாமி கேட்டிருந்தார். குறிப்பிட்ட புத்தகத்தை சென்னை டி.என்.லக்ஷ்மி, திருச்சி சரோஜா சுதர்சன் ஆகியோர் அனுப்பிவைத்துள்ளனர். அவை, சம்பந்தப் பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

** சக்தி விகடன் 16.2.16 தேதியிட்ட இதழில், தேவாரத் திருத்தலங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் தேவைப்படுவதாக வடலூர் செல்லக்காமு என்ற வாசகர் கேட்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, புலவர் ஜெயசெந்தில்நாதன் எழுதிய ‘தேவாரத் திருத்தலங்கள்’ எனும் புத்தகம் தம்மிடம் இருப்பதாகவும், தம்மைத் தொடர்புகொண்டால் (9444867642), பிரதி எடுத்து அனுப்புவதாகவும் சென்னை வாசகர் என்.சந்தானம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் நிலையம், ஏ.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் ரோடு, திநகர், சென்னை - 17 என்ற முகவரியில் இப்புத்தகம் கிடைக்கும் என்ற தகவலை தள.ப.தி.கோபாலகிருஷ்ணன் என்ற வாசகர் தெரிவித்திருக்கிறார்.

** கடந்த 1.3.16 தேதியிட்ட இதழில் திருச்சி வாசகர் சுதர்ஸனன், ‘பிரபஞ்ச உற்பத்தி’ எனும் நூல் பற்றிய விவரம் கேட்டிருந்தார். அந்நூலின் முதற்பகுதி யின் நகலை வேலூரைச் சேர்ந்த வாசகர் தாமோதரன் அனுப்பிவைத்திருக்கிறார். அது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

** சக்தி விகடன் 22.12.15 தேதியிட்ட இதழில், கோவை வாசகர் ஒருவருக்கு பாலாதிரிபுர சுந்தரி தீப ஸ்தோத்திரம் மற்றும் நமஸ்கார பூஜை முறை குறித்த புத்தகத்தை சென்னை வாசகி சரோஜா அனுப்பி வைத்திருந்தார். இந்தத் தகவலைப் படித்துவிட்டு தனக்கும் அந்த ஸ்தோத்திரம் தேவைப்படுவதாக ஆரணி வாசகி எச்.கஸ்தூரி கேட்டிருந்தார். அவருக்கும் அந்த ஸ்தோத்திரம் அனுப்பிவைக்கப்படுகிறது.

வி.ஐ.பி பதில்கள்

பூஜைக்கு உரிய மலர்களை முதல்நாளே கடைகளில் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, மறுநாள் பூஜைக்குப் பயன்படுத்தலாமா?

- கோமளவல்லி, நெய்வேலி


குளிர்சாதனப் பெட்டி, மலர்ச்சி குறையாத வகையில் பூக்களை பாதுகாக்கும் என்பது உண்மைதான். ஆனால் காலம் கடந்த தன்மையை குளிர்சாதனப் பெட்டியால் மாற்றிவிட முடியாது. காலம் முக்கியமானது. சோம்பலின் காரணமாக, பறித்த பூக்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்துவது கடவுளை ஏமாற்றுவதாகும். அந்தத் தவற்றுக்கு இடம்கொடுக்கக் கூடாது. அன்றலர்ந்த மலர் களால் ஆண்டவனை அர்ச்சிப்பதே சிறப்பு!

‘வயதான பிறகே காசிக்குச் செல்ல வேண்டும்’ என்கிறார்களே... அது சரியா?

- கமலா, கரூர்


உடல் உறுப்புகள் நன்றாக இருக்கும் நிலையிலும், தெளிவான மனநிலை உடைய சுகாதாரமான தருணத்திலும் காசிக்குச் செல்வது சிறப்பு. அங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய சடங்குகளைக் குறைவில்லாமல் செய்வதற்கு உடல் ஆரோக்கியம் தேவை. காது மந்தம், கண் பார்வை குன்றிவிட்டது, ஊன்றுகோல் இல்லாமல் செல்ல இயலாது, அவ்வப்போது மறதி தென்படுகிறது. இந்த நிலையில் காசிக்குப் போனால், செய்யும் சடங்கு நாடகமாக இருக்கும்; பலன் இருக்காது. வயதான பிறகே காசிக்குச் செல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லாது. ‘இளமையில் வேள்வியில் ஈடுபடு’ என்கிறது சாஸ்திரம். ஆக, இளம் வயதில் காசிக்குப் போவது சிறப்பு. ஈடுபாட்டுடன் சடங்கில் ஈடுபட முதுமையைவிட இளமையே சிறந்தது.

அதுபோல், தாய் - தந்தையை இழந்தவர்கள் மட்டுமே காசிக்குப் போக வேண்டும் என்பதும் இல்லை. பெற்றோரை இழந்தவர்களுக்கு கங்கைக் கரையில் தன் முன்னோருக்கு ஆராதனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர் இருப்பவர்களும் கங்கையில் நீராடித் தூய்மை பெற்று, ஈசனை வணங்கி அருள் பெறலாம்.

உதவலாம் வாருங்கள்!

மனநிலை சரியில்லாதவர்களுக்கு அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற தகவல் உண்மையா?

 - ரா.பெருமாள், குண்டூர்


சந்திரன் உலகத்தின் கண்களுக்குப் புலப்படாத வேளை அமாவாசை; முழு வளர்ச்சியில் கண்ணுக்குப் புலப்படும் வேளை பெளர்ணமி. இந்த இரண்டுக்கும் மனித மனதுக்கும் தொடர்பு உண்டு. மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை இவை அதிகமாகத் தாக்கும். பரம்பொருளின் மனதிலிருந்து தோன்றியவன் சந்திரன் என்ற விளக்கம் வேதத்தில் உண்டு. மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்புண்டு என்று கூறும் ஜோதிடம், தேய்ந்தும், வளர்ந்தும் தென்படும் சந்திரனது செயல்பாடு மனதுக்குப் பொருந்தும் என்றும் கூறுகிறது. அதன் மாறுபாடு, மனநிலையைப் பாதிக்கும்.