பிரீமியம் ஸ்டோரி

குழந்தைகளாக இருக்கிறபோதே, நல்ல ஒழுக்கத்தையும், பக்தியையும் உண்டாக்கிவிட்டால், பிறகு அவை நிலைத்து நிற்கும். சின்ன வயதிலிருந்தே நம் அநுஷ்டானங்களில் ஒரு பிடிப்பை உண்டாக்கிவிட வேண்டியது அவசியம்.

வலைத்’தலம்’!

ஒரு ஸ்நானம், அத்யயனம், ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஸ்தோத்திரங்கள் படிப்பது, எல்லோருமாகக் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணுவது, பஜனை பண்ணுவது என்று பிறகு ஆரம்பித்துவிடும். ‘டிஸிப்ளின்' பழக்கத்தால் வரவேண்டுமேயொழிய, உபதேசத்தால் அல்ல. அன்பு எல்லாரிடமும், பொறுமை தப்பு பண்ணுகிறவனிடமும், பொறாமையின்மை நம்மை விட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும். ஒருவன் நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும் கூட நமக்கு மேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அசூயைப் படக்கூடாது.

வலைத்’தலம்’!

நல்ல மனசிலே தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே நல்ல விளைவுகளை உண்டாக்கும் சத்தியம். உத்தமமான ஆத்மாக்களைப் பற்றிய ஞாபகம் மனதுக்கு வந்தாலே எல்லாவிதமான நல்ல பண்புகளையும் பெற்று விடுவோம். இறைவனிடத்தில் வைக்கிற பிரியமே நம்முடைய பிறவியைப் பயன் உள்ளதாகச் செய்கிறது. மற்றவர்களிடத்தில் வைக்கிற பிரியம் ஒரு காலம் இல்லாவிட்டால் ஒரு காலத்தில் உபத்திரவமாகத்தான் முடிகிறது.

- மஹா பெரியவா அருளுரை

வலைத்’தலம்’!

கோவை அருகே உள்ள  வெள்ளியங்கிரி மலை உச்சியில் ஒரு குகைக்குள் அருள்கிறார் இந்த சிவபெருமான். சமீபத்தில் சிவராத்திரியை ஒட்டி இவரை தரிசித்து வந்த திருப்பூர் சிவா எடுத்த அபூர்வ புகைப்படம் இது! இதுபோன்று இன்னும் பல தெய்விகத் தகவல்கள், படங்களுக்கு www.facebook.com/sakthivikatan பக்கத்தை லைக் செய்யுங்கள்.

வலைத்’தலம்’!

சிவராத்திரி அன்று  நமது முகநூலில் ஆயிரக்கணக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட மற்றொரு படம் இது.சென்னை- மாம்பலம், ஜெய்சங்கர் தெருவில் கோயில் கொண்டிருக்கும்  இந்த சாயிபாபா, சிவபெருமானைப் போன்று ருத்ராட்ச அலங்காரம் மற்றும் ரிஷப வாகனத்துடன் அளித்த தரிசனம், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது!

எத்தனை அழகான அம்மன் அலங்காரம்...

அவளே நேரில் அமர்ந்திருப்பது போல் அல்லவா இருக்கிறது!

இதுபோன்று கண்ணைக் கவரும் தெய்வப்படங்களை மொபைலில் கண்டு மகிழ, உங்களது ஸ்மார்ட்ஃபோனில் ‘இன்ஸ்டாகிராம்' என்ற ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, அதில் சக்தி விகடனைப் பின்தொடருங்கள்... தினம் தினம் தெய்வ தரிசனம்தான்!

வலைத்’தலம்’!

வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்! 

மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு