வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி வழிபாட்டுக்கு உரிய தீப ஸ்தோத்திரம், அதற்கு உரிய நமஸ்கார ஸ்லோக முறை அஷ்டகம் - எட்டு ஸ்லோகங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. அதேபோன்று, ‘பாலா (நெமிலி) அஷ்டகம்’ புத்தகமும் வேண்டும். அத்துடன் பாலா வழிபாட்டு முறை குறித்து அறிய ஆவலுடன் உள்ளோம். தகவல் அறிந்த வாசகர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கே.கோகிலா, சென்னை-78.

நான் ஸ்ரீகாலபைரவரை வழிபாடு செய்ய விரும்புகிறேன். அவரை வழிபடுவதற்கான விரதம் மற்றும் பூஜை வழிபாட்டு முறைகள், உரிய ஸ்லோகங்கள் ஆகியவை குறித்து தகவல்கள் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சக்ர வடிவத்துடன்கூடிய கால பைரவர் (திருவண்ணா மலையில் கிடைக்கும் என்கிறார்கள்.) திருவுருவப் படம் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- ஏ.உமாதேவி, சென்னை-91

முருகப்பெருமானுக்கு உள்ளது போன்றே பிள்ளையார் பெருமானுக்கும் திருப்புகழ் உண்டு என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். அந்தப் பாடல்களைப் பாடியவர் யார்? இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்? முருகனுக்கான திருப் புகழில் அவருக்கான திருத்தலங்களை அருணகிரியார் பாடியிருப்பது போன்று, பிள்ளையார் திருப்புகழிலும் விநாயகர் தலங்கள் பற்றிய தகவல்கள் உண்டா? இதுகுறித்து விவரம் அறிந்த நண்பர்கள் தகவல் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- கே.சேதுராமன், களக்காடு

ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசிம்மர் திருத்தலம் அகோபிலம். தமிழகத்தில் சோழிங்கர், சிங்கபெருமாள் கோவில், பூவரசங்குப்பம், சிங்கிரிகுடி, பரிக்கல் முதலான தலங்கள் நரசிம்மருக்கு உண்டு எனும் போதிலும், தட்சிண அகோபிலம் எனும் ஒரு திருத்தலமும் உண்டு என்று கேள்விப்பட்டேன். அது எந்தத் தலம், எப்படிச் செல்வது என்பது குறித்த தகவல் அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

- ரா. வேணுகோபாலன், கடலூர்

கவிகளாக தெய்வங்களைப் பாடிவைத்த பெரியோர்கள் பலர், சித்திரக்கவிகளாகவும் இறைப்பாடல்களை பாடியிருக்கிறார் கள். அவை ரதம், குக்குடம் (கோழி) வடிவிலான சித்திரங்களாக திருக்கோயில்களில் இடம்பெற்றிருக் கின்றன என்ற தகவலையும் நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். இந்த சித்திரக் கவிகள், அவை இடம்பெற்றிருக்கும் ஆலயங்கள் குறித்த தகவல்கள் அறிந்த வாசகர்கள் பகிர்ந்துகொண்டால், பயனடைவேன்.

- கீர்த்தனா சீனிவாசன், மதுரை-2

உதவிக்கரம் நீட்டியவர்கள்

** சக்தி விகடன் 16.2.16 தேதியிட்ட இதழில் தேவாரத் திருத்தலங் கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் தேவைப்படுவதாக வீரபாண்டியைச் சேர்ந்த வடலூர் செல்லக்காமு கேட்டிருந்தார்.
இதைப் படித்துவிட்டு பெங்களூரைச் சேர்ந்த ஆ.சிவசூரியன் என்ற வாசகர், தனது மகள் திருமணத்தன்று பன்னிரு திருமுறை குறுந்திரட்டு ஒன்று வெளியிட்டதாகத் தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்தையும் நமக்கு அனுப்பிவைத்திருந்தார். அது, வீரபாண்டி வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

** சக்தி விகடன் 16.2.16 தேதியிட்ட இதழில் ‘ஸ்ரீராகவேந்திரரின் ஸ்தோத்திரமாலா’ எனும் புத்தகம் தேவைப்படுகிறது என்று காரைக்கால் வி.வைத்தியநாதசாமி கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர் சிவராம கிருஷ் ணன், ஸ்ரீராகவேந்திர ஸஹஸ்ர நாமாவளி எனும் புத்தகத்தை அனுப்பியுள்ளார். அது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வி.ஐ.பி பதில்கள்

? உபாசனை என்றால் என்ன? உபாசகம் பெறுவது எப்படி?

- சி.சதாசிவம், நெல்லை-2

குறிப்பிட்ட கடவுளின் திருவடிவத்தால் ஈர்க்கப் பட்டு, அந்தத் திருவடிவையே பரம்பொருளாகக் கொண்டு உடல், உள்ளம் மற்றும் சொல்லால் வழிபடுவதே உபாசனை. தெய்வ உபாசனை, பிறப்பை முழுமையாக்கிக் கொள்ளப் பயன்படும். ஆம்... உபாசகன், ‘எல்லாம் அவன் செயல்’ என்ற உணர்வில் ஊன்றி, இறைவனின் அருளுக்குப் பாத்திரமாகிறான்.

உபாசனைகளுக்கு ஆதாரம் தந்திர சாஸ்திரம். இது ஒரு தனிப் பிரிவு. வழிபாட்டு முறை, ஜபிக்க வேண்டிய மந்திரம் முதலியவற்றை தந்திர சாஸ்திரம் எடுத்துரைக்கும். தங்களுக்குப் பிடித்த தெய்வம் எதுவோ, அதற்குரிய மூல மந்திரத்தை, தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று தந்திர சாஸ்திர முறைப்படி வழிபட்டால், தாங்களும் உபாசகர் ஆகலாம்.

? ஸ்வாமி படங்களுக்கு சார்த்தும் புஷ்பங்கள் வாடிவிட்டால், அவற்றை உடனே அகற்றவேண்டுமா?

- நித்யா, சென்னை-44

காலையில் போட்ட மாலை அப்படியே இருக்கலாம். மறுநாள் பூஜையின்போதுதான் மாற்ற வேண்டும். பூஜையைப் பற்றி ஒரு விளக்கம் உண்டு. இந்த உடல் இருக்கிறதே, அது கோயில். உள்ளே உட்கார்ந்திருக்கிற உயிர் இருக்கிறதே, அது கடவுள். அஞ்ஞானம் என்பதான நிர்மால்யத்தை வெளியிலே தள்ளி பூஜையை ஆரம்பி என்பார்கள். அஞ்ஞானம் என்பது நிர்மால்யம். நேற்றுப் போட்டது நிர்மால்யம். அதை அகற்றிவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

கோயிலில் பூஜைக்கு முன் கதவைத் திறப்பதற்கே ஒரு மந்திரம் உண்டு. அதைச் சொல்லிக் கதவைத் திறந்து, முந்தைய நாளின் நிர்மால்யத்தை அகற்ற வேண்டும். அதன் பிறகுதான் ஜலமே விடவேண்டும் என்று விதி உண்டு. கேரளாவில் நிர்மால்ய தரிசனம் என்பது பிரசித்தம். முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறுநாள் பூஜையின்போது பூக்களை அகற்றினால் போதுமானது.