பிரீமியம் ஸ்டோரி

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

ஆசிரியர்: ஆர்.பொன்னம்மாள்

வெளியீடு: கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், எண். 372/1, மாங்காடு பட்டூர் கூட் தெரு, மாங்காடு,  சென்னை-600 122

விலை:  ரூ. 50/- பக்கங்கள்: 144
   

பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்வில் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவற்றுடன், பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட பரிபூரண பஞ்சாமிர்தவண்ணம், வேற்குழவி வேட்கை முதலானவற்றையும் பொருள் விளக்கத்துடன் தந்திருப்பது, பாராட்டுக்குரியது.

புத்தக விமர்சனம்

ஸ்ரீராகவேந்திர விஜயம்

ஆசிரியர் பெயர்: நாராயணாசார்யர்

வெளியீடு: அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோயில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-600 005

விலை:ரூ.140/-                             பக்கங்கள்: 224


ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் குமாரர் மகாகவி நாராயணாசார்யரால் இயற்றப்பட்டு, ஸ்ரீராகவேந்திரரால் பார்வையிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மகா காவியம் இது. 1987-ல் வெளியான இந்நூல், தற்போது திருத்தியமைக்கப்பட்ட புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. ஸம்ஸ்கிருதத்தில் அமைந்த மூலத்துக்கான தமிழ் விளக்கவுரையை கொண்ட பிரத்தியேகமான முதல் நூல் என்பது சிறப்பு.

துன்பங்களைத் தீர்க்கும் துர்க்கை அம்மன்

ஆசிரியர்: பருத்தியூர் டாக்டர்.கே.சந்தானராமன்

வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38.நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-600 017

விலை: ரூ.40/-                                பக்கங்கள்: 80


தேவி பாகவதமும், தேவி மகாத்மியமும் குறிப்பிடும் துர்கையைப் பற்றிய தகவல்களை எளியத் தமிழ் நடையில் தருகிறது இந்நூல். அத்துடன், புகழ்பெற்ற துர்கை திருத்தலங்கள், தோத்திரங்கள், தேவியின் அற்புதங்கள் குறித்தும் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

புத்தக விமர்சனம்

யோகியுடன் கொஞ்ச தூரம்

ஆசிரியர்: பெயர்: எஸ்.பார்த்தசாரதி

வெளியீடு: நேசமுடன், 64, மதுரைசாமி மடம் தெரு, சென்னை-600 011

விலை: ரூ.150/-                         பக்கங்கள்: 304


மகான் யோகி ராம்சுரத்குமார் சந்நிதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், பலவிதமான அனுபவங்கள், ஆச்சரியங்கள், மனதைத் தழுவும் நிகழ்ச்சிகள் என தனது அனுபவங்களை ஒவ்வொன்றையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நிறைவில் யோகியின் சரிதத்தையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்நூல், யோகி ராம்சுரத்குமார் பக்தர்களுக்கு பொக்கிஷமாகத் திகழும்!

ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் சி.டி.-கள் குறித்த விமர்சனங்கள்/தகவல்கள் இந்தப் பகுதியில் இடம்பெற, இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவும். முகவரி: சக்தி விகடன், (விமர்சன பகுதி), 757 அண்ணா சாலை, சென்னை-2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு