வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

சித்தர்கள் வழிபாடு, மூலமந்திர விளக்கங்கள் கொண்ட புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகிறது. எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்கள். அல்லது அவை கிடைக்கும் இடம் குறித்த தகவலைத் தாருங்களேன்.

- எஸ்.கவிதா, ஸ்ரீரங்கம்

‘பந்தம் அகற்றும் அநந்த குணப் பரப்பும்’ என்று தொடங்கும் பாடல் காஷ்யப முனிவர் அருளிய காரியஸித்தி மாலையில் உண்டு. இதன் மூலம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. அந்த நூல் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- வி.வெங்கடராமன், செகந்திராபாத்

சக்தி அம்சங்களில் ஒருதேவி சாகம்பரி. விவசாயம் செழிக்கவும், காய்-கனி விளைச்சல் அதிகரிக்க வும் இவளை வழிபடவேண்டும் என்று பெரியவர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். இந்த தேவியின் திருவுருவப்படம் மற்றும் வழிபாட்டு முறைகள் அறிந்தவர் கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.சோமசுந்தரம், அம்பாசமுத்திரம்

எங்கள் குலதெய்வம் அசிதாங்க பைரவர். வீட்டில், தை மாத அஷ்டமி தினத்தில் சுவற்றில் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் சூலக் குறி வரைந்து, படையலிட்டு வழிபட்டு வருகிறோம். இவருக்கென்று தனிக் கோயில் எங்கு உள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

- கே.சி.பரமசிவம், கடலூர்

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்களின் மூலமும் உரையும் கொண்ட புத்தகம் தேவைப்படுகிறது. கிடைக்கும் இடம் அறிந்தவர்கள், தகவல் தாருங்களேன். அல்லது எவரிடமேனும் அந்த புத்தகம் இருந்தால் தந்து உதவிசெய்யுங்கள்.

- ஆர்.கருப்பையா, தேனி

உதவிக்கரம் நீட்டியவர்கள்

சக்தி விகடன் 12.4.16 தேதியிட்ட இதழில், ‘கால பைரவ வழிபாடு’ பற்றிய விவரங்கள் தேவைப்படுவதாக சென்னை வாசகி உமாதேவி கேட்டிருந்தார். அதைப் படித்த திருநெல்வேலி வாசகி அருணாபத்ரி, ‘சகல ஐஸ்வர்யங்களும் தரும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்’ என்ற புத்தகத்தை அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

** சக்தி விகடன் 12.4.16 தேதியிட்ட இதழில், தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் நரசிம்மர் ஆலயம் தமிழகத்தில் எங்குள்ளது என்று கடலூர் வாசகர் வேணுகோபாலன் கேட்டிருந்தார். அவருக்கு, ‘பாண்டி நாட்டு அகோபிலம்’ என்று கூறப்படுவது, கீழப்பாவூரில் உள்ள - 16 திருக்கரங்களுடன் அருள்புரியும் அழகிய சிங்கபெருமாள் கோயிலாகும்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால் கீழப்பாவூரை அடையலாம். நரசிம்மர் அவதரித்தது மாலை வேளையில் (பிரதோஷ காலம்). ஆகவே, இந்தத் தலத்தில் மாலை வேளையில் நரசிம்மரை வழிபடுவது விசேஷம். இந்தக் கோயில் காலை 7:30 முதல் 10:30 மணி வரையிலும், மாலையில் 5 முதல் 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும்’ என பதில் தந்திருக்கிறார், புதுச்சேரி வாசகி மனோஹரி கணேஷர்.

** சக்தி விகடன் 26.4.16 இதழில் விளக்குபூஜை பற்றி விவரம் கேட்டிருந்தார் சென்னையைச் சேர்ந்த வாசகர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இதைப் படித்த கும்பகோணம் வாசகர் வி.சந்தானகிருஷ்ணன், திருவிளக்கு வழிபாடு என்ற புத்தகத்தை அனுப்பியுள்ளார். அது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

மேலும், சிவாலயங்களில் பாடப்படும் பஞ்சபுராணம் குறித்து, நெல்லை வாசகர் கிருஷ்ணன் தகவல் கேட்டிருந்தார். அவருக்காக பஞ்ச புராணப் பாடல்களையும் எழுதி அனுப்பியுள்ளார், வி.சந்தானகிருஷ்ணன். அதுவும் சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

வி.ஐ.பி பதில்கள்

? விரதம் இருப்பவர்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்களே, ஏன் அப்படி?

- வீ.ஆறுமுகம், பல்லடம்

வெங்காயமும் பூண்டும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. வெங்காயத்துக்கு, ‘ரஸோனம்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. உடல் ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதில் அரசன் என்று வெங்காயத்தைப் புகழ்வர் (நிகில ரஸாயன ராஜோகந்தே நோக்ரேண லசுனஇவ).

பல மருந்துகளில் மூலப் பொருளாகவும், துணைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். பல பிணிகளைப் போக்க வெங்காயம் பயன்படும் என்கிறது ஆயுர்வேதம். ஆகவே, உடல் ஆரோக்கியத்தைத் தக்க வைக்கும் மருந்தாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது அன்றாட செயல்பாட்டில் இருக்க வேண்டிய ஈடுபாட்டைத் தடுப்பதால், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

தாமஸ உணவுகள், மனதை பாதிப்பதால் சிரத்தை குறையும். இதுவே சோம்பலாக மாறி, கோபதாபங்களில் சிக்கி காரியத்தையே கெடுத்து விடும். தாமஸ உணவின் குணம் வெங்காயத்திலும் உண்டு. எனவே, மனதின் தூய்மையைப் பாதுகாக்க வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை எப்போதும் உணவில் தவிர்ப்பதே நல்லது என்கிறது தர்ம சாஸ்திரம். இவற்றை உணவில் சேர்த்துப் பழகியவர்கள், உடனே விட்டு விட முடியாது என்பதால், ‘அமாவாசை நாளிலாவது சேர்க்காமல் இருக்கலாம்’ என்றொரு நடைமுறை தோன்றியது.

வேதம் ஓதுவோரும், சாஸ்திரங்களைக் கையாளுவோரும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் மன ஓட்டம் சுணங்காமல் இருக்க வேண்டும். எனவே, பூண்டு மற்றும் வெங்காயத்தை இவர்கள் சாப்பிடாமல் இருக்குமாறு தர்ம சாஸ்திரம் நிர்பந்திக்கிறது. வங்கதேச அந்தணர்கள், வெங்காயத்தைத் தவிர்ப்பார்கள். தர்க்க சாஸ்திர வல்லுநர்களும் யோக சாஸ்திர ஆராய்ச்சியில் சிறப்பு பெற்றவர்களும் அங்கே உண்டு. ஸ்ரீகிருஷ்ணரும், ‘தாமஸ’ உணவை விலக்கச் சொல்வார்.

வெங்காயம், ஆராயும் திறனைப் பின்னுக்குத் தள்ளி, ஆசைக்கு உந்துதலாகச் செயல்பட வைத்து விடும். விபரீதத்தை சந்தித்த பிறகு, ‘ஏமாந்து விட்டோமே’ என்று எண்ணத் தோன்றும். ஆகவே, மனத் தூய்மையைப் பராமரிக்க வெங்காயத்தைத் தவிர்ப்பது நல்லது.

நன்மையும் தீமையும் எல்லாப் பொருளிலும் கலந்தே இருக்கும். நன்மையை பெரிசுபடுத்திப் புகழ்வதும் தீமையை சுட்டிக் காட்டி இகழ்வதும் சரியல்ல! தீமையை எச்சரிக்கையுடன் தவிர்ப்பதே அழகு. உணவில் முதலிடம் வகிக்கும் வெங்காயத்தை, அகற்றுவது கடினம்; குறைத்துக்கொள்வது சுலபம்.