வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

நான் தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வருகிறேன். ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர் ‘அம்பிகையின் ஷோடச நாமங்களைப் பாராயணம் செய்தாலே லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்’ என்று கூறினார். அந்த அம்பிகையின் 16 நாமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிந்த ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

- கனகம், கோட்டயம்

பாலா திரிபுர சுந்தரி தீப ஸ்தோத்திரம் மற்றும் நமஸ்கார பூஜை முறை குறித்த புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்களேன்.

- சி.புஷ்பா பார்வதி, சென்னை-52

‘பந்தம் அகற்றும் அநந்த குணப் பரப்பும்’ என்கிற சம்ஸ்கிருத மூலப்பாடல் யாருக்கேனும் தெரிந்தால், எனக்குத் தெரியப்படுத்த முடியுமா?

- கே.எஸ்.பொன்னம்பலம், சென்னை-49

நமது செயல்முறைகளும், மற்றவர்களுடனான தொடர்புமுறைகளும் மேம்பட சிறந்த வழிகாட்டி ‘ஆசாரக்கோவை’ என்னும் பழந்தமிழ் நூல். 100 பாடல்களைக் கொண்ட இந்த நூல் எங்கு கிடைக்கும் என்பதை யாரேனும் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.

- கு.துரைசுவாமி, திருவள்ளூர்.

குடும்பத்தில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தீராத பிணிகள் நீங்குவதற்காக வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய எளிய கடவுள் வழிபாடுகளைப் பற்றி யாரேனும் தெரிவித்து உதவுங்களேன்.

- பி.சந்திரா, திருச்சி

சிவனின் ஸ்லோகமான ‘ருத்ராஷ்டகம்’ உள்ள புத்தகம் வைத்திருப்பவர்கள் அதைப் பிரதி எடுத்து எனக்கு அனுப்பினால் உதவியாக இருக்கும். மேலும், தேவார ஸ்தலமான ‘எலும்பியன்கோட்டூருக்கு’ எப்படிச் செல்லவேண்டும் என்ற தகவலையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

- என்.சாம்பசிவமூர்த்தி, வேலூர்-9

பயத்தைப் போக்கும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு மற்றும் விரத முறைகளைப் பற்றிய தகவல்களை யாரேனும் பகிர்ந்துகொள்ள முடியுமா?

- பி.சரவணன், ஸ்ரீரங்கம்

கீதா சுப்ரமண்யன் எழுதிய ‘ஸ்ரீமஹாகாளி சாலீஸா’ என்ற புத்தகம் எங்கு கிடைக்கும்?

- எஸ்.ராமஸ்வாமி, சென்னை-42

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்களால் எழுதப்பட்ட

“காணியும் காணியும் காணியும் காணியும் காற்
காணியும் காணியும் காணியும் காணியும் காணி முக்காற்
காணியும் காணியும் காணியும் காணியும் நாற்
காணியும் காணியும் காணியும் காட்டும் கழுக்காணியும் காணியும் காணியும் காட்டும் கழுக்குன்றமே” என்ற பாடலின் பொருள் மற்றும் இப்பாடல் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் ஆகியவை பற்றி, அறிந்த ஆன்மிக அன்பர்கள் தகவல் தந்து உதவினால், பயனடைவேன்.

- ம. இளங்கோ, சென்னை - 71.

உதவிக்கரம் நீட்டியவர்கள்

ஸ்ரீகாலபைரவரை வழிபடுவதற்கான விரதம் மற்றும் பூஜை வழிபாட்டு முறைகள், ஸ்லோகங்கள், திருவுருவப் படம் ஆகியவை குறித்து சக்தி விகடன் 12.4.16 இதழில், சென்னையைச் சேர்ந்த ஏ.உமாதேவி என்ற வாசகி கேட்டிருந்தார். இந்த இதழிலும் ஸ்ரீரங்கம் வாசகர் பி.சரவணன் இதே தகவல் குறித்து கேட்டுள்ளார்.

சென்னை வாசகர் சாயி நடராஜர், ‘உபாஸனா தெய்வங்கள்’ என்னும் பைரவர் பற்றிய புத்தகத்தை அனுப்பியதோடு, பைரவர் படம் சென்னை தேவராஜ முதலி தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய புத்தகத்தின் நகல்கள், சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

சக்தி விகடன் 10.5.16 தேதியிட்ட இதழில் ‘திருமூலர் அருளிய திருமந்திரம்’ பாடல்களின் மூலமும் உரையும் புத்தகம் தேவைப்படுவதாக தேனியைச் சேர்ந்த வாசகர் ஆர்.கருப்பையா கேட்டிருந்தார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை-1 என்ற முகவரியில் அப்புத்தகம் கிடைக்கும் என்று கோவில்பட்டி வாசகர் தள.ப.தி.கோபால கிருஷ்ணன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

26.4.16 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், சிவாலயங்களில் பாடப்படும் பஞ்ச புராணம் பற்றிய புத்தகம் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர்கள் கிருஷ்ணன் மற்றும் அருணா பத்ரி ஆகியோர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு, கும்பகோணத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்ற வாசகர் அனுப்பி வைத்துள்ள பஞ்சபுராணம் பாடலின் நகல்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
சக்திவிகடன் 26.4.16 தேதியிட்ட இதழில், ‘வீட்டில் விளக்கு பூஜை செய்யலாமா? எப்படிச் செய்ய வேண்டும்? அதற்கு வழிகாட்டும் வகையில் ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?’ என்று, சென்னை வாசகர் த ஜி.கிருஷ்ணமூர்த்தி கேட்டிருந்தார். திருவிளக்கு வழிபாடு பாடல்கள் அடங்கிய தொகுப்பின் நகலை, கம்பத்தைச் சேர்ந்த செல்லம் என்ற வாசகர் அனுப்பியிருக் கிறார். சம்பந்தப்பட்ட வாசகருக்கு அது அனுப்பி வைக்கப்படுகிறது.

சக்தி விகடன் 10.5.16 தேதியிட்ட இதழில், தங்கள் குல தெய்வமான ஸ்ரீஅசிதாங்க பைரவர் பற்றிய தகவல் அறிந்தோர் தெரிவிக்குமாறு கடலூர் வாசகர் கே.சி.பரமசிவம் கேட்டிருந்தார்.
ஸ்ரீஅசிதாங்க பைரவர் அஷ்ட பைரவர்களில் முதலில் இடம் பெறுபவர். தனக்கு அருள்புரிந்த ஸ்ரீஅசிதாங்க பைரவருக்கு சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் சந்நிதி அமைத்து மகிழ்ந்தார் பிரம்மா. அதனாலேயே பிரம்மபுரம் என்ற சிறப்புப் பெயரும் சீர்காழி தலத்துக்கு உண்டு. மேலும் தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் திருக்கண்டியூர் தலத்திலும் ஸ்ரீஅசிதாங்க பைரவர் சந்நிதி உள்ளது என்னும் தகவல்களைத் தந்திருக்கிறார், சென்னை வாசகர் சந்திரசேகரன்.

ஈரோட்டைச் சேர்ந்த லோகேஷ் என்ற வாசகர், சக்தி விகடன் 29.3.16 தேதியிட்ட இதழில், ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம்’ தமிழ் அர்த்தத்துடன் கூடிய புத்தகம் தேவை எனக் கேட்டிருந்தார்.

திருச்சியைச் சேர்ந்த பஞ்சாபகேசன் என்ற வாசகர், சீதாலட்சுமி இராமஸ்வாமி கல்லூரி, சங்கரன்பிள்ளை ரோடு, திருச்சி-2 என்ற முகவரியில் அந்தப் புத்தகம் கிடைக்கும் என்ற தகவலை தெரிவித்ததோடு, புத்தகத்தையும் அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

சக்தி விகடன் 26.4.16 தேதியிட்ட இதழில், ‘ஆகம முறைப்படி தயாரிக்கப்படும் சுத்தமான விபூதி எங்கு கிடைக்கும்?’ என்று தூத்துக்குடி வாசகர் ஆனந்தலிங்கம் கேட்டிருந்தார். திருநெல்வேலி டவுன், சுவாமி சந்நிதியில் உள்ள அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம் (செல்போன்: 9965532946) என்ற முகவரியில் கிடைக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார், திருநெல்வேலி வாசகர் கைலாசம்.
சக்தி விகடன் 12.4.16 தேதியிட்ட இதழில், சென்னை வாசகி கோகிலா, ‘பாலா அஷ்டகம்’ கேட்டிருந்தார். இதைப் படித்த மதுரையைச் சேர்ந்த சாந்தா என்ற வாசகி ‘பாலா அஷ்டகம்’ என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளின் நகல்களை அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சித்தர்கள் வழிபாடு, மூல மந்திர விளக்கங்கள் கொண்ட புத்தகம் தேவைப் படுவதாக, ஸ்ரீரங்கம் வாசகி கவிதா, சக்தி விகடன் 10.5.16 தேதியிட்ட இதழில் கேட்டிருந் தார். காரைக்குடியைச் சேர்ந்த பத்மகிருஷ்ணன் என்ற வாசகர், ‘சகல ஐஸ்வர்யங்கள் தரும் பதினெண் சித்தர்கள் வரலாறு’ என்னும் புத்தகத்தில் இது விரிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், ஸ்ரீவன்னி விநாயகர் புத்தக நிலையம், 58/ஏ, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசல், மதுரை-1 (செல்: 98942 80132) என்ற முகவரியில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சித்தர் களஞ்சியம் என்ற புத்தகத்தில் சித்தர் மூல மந்திரங்கள் உள்ளன. யோகி கைலாஷ்நாத் எழுதிய இந்தப் புத்தகம், கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தியாகராய நகர், சென்னை-17 (போன்: 044-24314347) என்ற முகவரியில் கிடைக்கும் என்று சென்னை வாசகி லதா ஸ்வாமிநாதன் கூறியுள்ளார்.