Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

னது தகப்பனார்  கார்த்திகை மாதம் ஜோதி தீபத்தின்போது கீழ்க்காணும் பாடல்களைப் பாடுவார். எனக்கு அவற்றில் சில பாடல்களின் முதல் வரி மட்டுமே தெரியும். அவற்றை முழுமை யாக அறிந்தவர்கள் எவரேனும் இருந்தால், பகிர்ந்துகொள்ளுங்களேன்.

பாடல்களின் முதல் வரிகள்...

‘மூசிக வாகன மேறும் மூத்தோன் வாழி
முப்பத்து முக்கோடி தேவர் வாழி...’
‘மச்சரிசி கூர்மர் ஆதன் வேதன்
மாலுடனே பிரம்மாவும் மண்ணும் விண்ணும்...’


இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகத்தின் பிரதி இருந்தால் தந்து உதவுங்களேன்.

- க.தண்டபாணி, பொள்ளாச்சி

தீராத கடன் தொல்லைகள் தீர செய்ய வேண்டிய வழிபாடுகள், படிக்கவேண்டிய ஸ்லோகங்கள் பற்றிய தகவல்களைத் தந்து உதவுங்கள்.

- கிருஷ்ணவேணி நடேசன், ஸ்ரீரங்கம்

னக்குத் தமிழ் உரையுடன் கூடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனை புத்தகம் தேவைப்படுகிறது. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் அல்லது எவரிடமேனும் இந்த புத்தகம் இருந்தால், அதனைப் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- மீ.சீனிவாசன், பரமக்குடி-7

திருமணம் விரைவில் நடைபெறுவதற்கு வழிபட வசதியாக, ஸ்ரீசுயம்வர பார்வதி படம் மற்றும் ஸ்லோகமும், இதர ஆன்மிகத் தகவல்களையும் அன்பர் ஒருவர் தபால் மூலம் இலவசமாக அனுப்பிவருவதாக அறிந்தேன். இப்படி சேவை செய்துவரும் அந்த அன்பரின் முகவரி அறிந்தவர்கள், அதுபற்றி விவரம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

- ஏழுமலை, ரய்சூர்

னக்கு யஜுர்வேத த்ரிகால சந்தியாவந்தனம் மற்றும் அமாவாசை தர்ப்பணம் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகம் தேவைப்படுகிறது. ஆக்கூர் அனங்காசார்யர் அவர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை விவரம் தெரிந்த வாசகர்கள் தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

- என்.ஜெயராமன், ஸ்ரீரங்கம்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

* சிவனின் ஸ்லோகமான ‘ருத்ராஷ்டகம்’ உள்ள புத்தகத்தின் பிரதி தேவைப்படுவதாக  சக்தி விகடன் 7.6.16 இதழில் வேலூரைச் சேர்ந்த என்.சாம்பசிவமூர்த்தி கேட்டிருந்தார்.

செகந்திராபாத்தைச்  சேர்ந்த வி.வெங்கட்ராமன்  என்ற வாசகர் ‘ருத்ராஷ்டகம்’ புத்தகத்தின் பிரதியை அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது.

 பிணி நீக்கும் தேவாரப் பதிகங்களைப் பற்றிய (தேவார திரட்டு) தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று சக்தி விகடன் 21.6.16 இதழில் திருவானைக்காவல் வாசகி பி.ஜெயலட்சுமி கேட்டிருந்தார்.
இதைப் படித்த சென்னையைச் சேர்ந்த வாசகர் எம்.ஏ.ராஜசேகரன், ‘அல்லல் போக்கும் அருட்பதிகங்கள்’ என்ற புத்தகத்தில்  இத்தகைய தொகுப்பு இருக்கிறது என்றும், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை -17 என்ற முகவரியில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள்

சென்னை, சேலையூரைச் சேர்ந்த வாசகர், வி.நடராஜன் ‘தமிழ் வேதத் திரட்டு’ என்ற புத்தகத்தில் பயனுள்ள பதிகங்கள் (34) உள்ளன’  என்று விவரம் தந்துள்ளார். அத்துடன், அந்த புத்தகத்தை வெளியிட்டோர்- சிவ.ஆ.பக்தவத்சலம், சிவனடியார் திருக் கூட்டம், 43, சன்னதி வீதி, நல்லூர்பேட்டை, குடியேற்றம் என்ற தகவலையும் தந்துள்ளார்.

திருச்சி ஸ்ரீஐயப்பன் சங்கம், (எண்: 2, லாசன்ஸ் ரோடு, திருச்சி-1) வெளியிட்டுள்ள ‘குறைகள் நிவர்த்தித் தலங்கள்’ என்ற புத்தகத்தில், குறைகளைக் களைவதற்காக படித்து வழிபடவேண்டிய தேவாரப் பதிகங்கள் உள்ளன என்ற தகவலை திருச்சி வாசகர் வி.எஸ்.வேலாயுதன் தெரிவித்துள்ளார்.

வாராஹி நவராத்திரி பற்றியும், வாராஹி வழிபாடு பற்றியும் 21.6.16 சக்தி விகடன் இதழில் வாசகி ஆர்.லக்ஷ்மி கேட்டிருந்தார்.

டாக்டர் ரத்தினசபாபதி என்ற வாசகர் வாராஹி வரலாறு பற்றிய  புத்தகத்தை அனுப்பியுள்ளார். அந்த புத்தகம் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஸ்ரீதுர்கைச் சித்தரால் எழுதி தொகுக்கப்பட்ட வாராஹி பற்றிய புத்தகத்தில் விவரமாக அனைத்து செய்திகளும் உள்ளன என்றும், அது ‘ஸ்ரீதுர்கை சித்தர்பீடம், படப்பை, தாம்பரம் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்’ என்ற முகவரியில் கிடைக்கும் என்ற தகவலை சென்னை வாசகர் சி.வி.அனந்தராமன் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த சரோஜா சுதர்சன்ராம் என்பவர்  ‘ஆஷாட நவராத்திரியும் வாராஹி வழிபாடும்’ என்ற புத்தகத்தின் பிரதியை அனுப்பியுள்ளார். அது சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism