Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்

ஸ்வாமி ஐயப்பனின் சரிதத்தை விவரிக்கும் புத்தகம் ஒன்று ‘வேதாந்த புராணம்’ என்ற பெயரில் விற்பனை ஆவதாக அறிந்தேன். எனினும், பல கடைகளில் விசாரித்தும் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. அது, எங்கு கிடைக்கும் என விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், உதவியாக இருக்கும்.

- கோ.மோகன்ராம், சென்னை-129

பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் குறித்த ஸ்தோத்திரங்கள் அடங்கிய புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- எம்.முருகானந்தம், தூத்துக்குடி

எனக்கு கல்லால மூலிகை தேவைப்படுகிறது. கல்லால விருட்சம் எங்கு வளரும்? இதுகுறித்த விவரம் அறிந்த நண்பர்கள் விரிவாக விளக்கினால், என்னைப் போன்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

- கை.கணேசமூர்த்தி, தென்காசி

‘ஈஷ கிரீச நரேச சுரேச பூஷணபோ சம்போ சங்கர சாம்போ’ எனத் துவங்கும் பாடல் ஒன்று உண்டு. அது எனக்குத் தேவைப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக என்னால் வெளியே செல்ல முடிவதில்லை. ஆகவே, இந்தப் பாடலை வைத்திருப்பவர்கள், அதன் நகலை அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- வி.ஜெயலக்ஷ்மி அம்மாள், கோவை-2

ரிக் வேதம், யஜுர் வேதம் மூலமும் உரையும் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும்? அல்லது குறிப்பிட்ட புத்தகம் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- கோபால கிருஷ்ணன், கீழப்பாவூர்

மாகாளம் என்று சிறப்பிக்கப்படுவது உஜ்ஜயினி மாகாளம். இதுபோன்று மாகாளம் என்று அழைக்கப்படும் ஊர்கள் தமிழகத் திலும் உள்ளன என்று அறிந்தேன். அவை குறித்த விரிவான தகவல்களை அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கீர்த்தனா சுரேஷ், வந்தவாசி

நாங்கள் வாணிய செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்கள் முன்னோர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே பொள்ளாச்சி பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டார்கள். அங்கிருந்தும் சில உறவினர்கள் மதுரைக்கும் தேனிக்குமாக நகர்ந்துவிட்டார்கள். எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் என்று மட்டும் எங்கள் தாத்தா சொல்லியிருக்கிறார். ஆனால், எங்கள் குலதெய்வக் கோயில், பொள்ளாச்சி அருகில் கணபதி தெருவில் இருப்பதாக சமீபத்தில் பிரச்னம் பார்த்ததில் தெரிய வந்தது. இக்கோயில் பற்றிய தகவல் அறிந்தவர்கள் விவரம் தெரிவித்தால், எங்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு உதவியாக இருக்கும்.

- எம்.கெளதம், தேனி-31

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் தரப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

உதவிக்கரம் நீட்டியவர்கள்

16.8.16 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், ‘தீராத கடன் தொல்லைகள் தீர செய்யவேண்டிய வழிபாடுகள், படிக்க வேண்டிய ஸ்லோகங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும்’ என்று ஸ்ரீரங்கம் வாசகி கிருஷ்ணவேணி நடேசன் கேட்டிருந்தார். அவருடைய கோரிக்கையைப் படித்துவிட்டு, உரிய வழிபாட்டுக்கு உகந்த ஸ்லோகங்கள் மற்றும் துதிப்பாடல்கள் அடங்கிய தனது புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறார், சென்னை வாசகர் சுந்தர்ராமன். அந்த புத்தகம் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

மேலும் கடன் பிரச்னை தீர அருளும் அங்காரஹ ஸ்லோகம் - ஸ்தோத்திரத்தை எழுதி அனுப்பியிருக்கும் காரைக்குடி வாசகர் லெ. முத்துகிருஷ்ணன், குறிப்பிட்ட ஸ்தோத்திரப் பாடல்கள் அடங்கிய புத்தகம், தர்ம ப்ரசார தெய்விக மாத வெளியீடாக 1978-ல் வெளியிடப்பட்டது என்றும், தற்போது இந்நூல் எங்கும் கிடைக்கவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரே தொடர்ந்து, கீழ்க்காணும் விவரங்களையும் தந்துள்ளார்:

* ஏழ்மை விலக நோய்கள் நீங்க மந்திரங்கள் - இந்த புத்தகம், கவிதா பப்ளிகேஷன், த/பெ எண் 6123, 8- மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், சென்னை-17 என்ற முகவரியில் கிடைக்கும்.

* ஸ்ரீலக்ஷ்மி குபேர தனாகர்ஷண பூஜை - இந்த புத்தகம், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், 372/1, மாங்காடு பட்டூர் கூட்ரோடு, மாங்காடு, சென்னை - 600 122 என்ற முகவரியில் கிடைக்கும்.

* `பலன் தரும் பதிகங்கள்’ எனும் புத்தகம் சகுந்தலை நிலையம், புதிய எண்- 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-1 என்ற முகவரியில் கிடைக்கும்.

* ஆதிசங்கரர் அருளிய செளந்தர்ய லஹரியில் ஸ்வர்ண தகடு யந்திரக் குறியுடன் கூடிய பூஜை முறை மற்றும் ஸ்லோகங்கள் கொண்ட புத்தகம் கிரி டிரேடிங், கபாலீஸ்வரர் கோயில் தெரு, மயிலை, சென்னை-4 என்ற முகவரியில் கிடைக்கும்.

சென்னை வாசகர் சாயி நடராஜ், கடன் பிரச்னை விலக அருளும் நரசிம்ம ஸ்தோத்திரங்கள், காலபைரவ வழிபாடு முதலான விவரங்கள் அடங்கிய நகல் பிரதிகளை அனுப்பிவைத்துள்ளார். அவை, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உதவலாம் வாருங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்வம் தரும் வெள்ளெருக்கு!

விநாயகரைப் போன்று எளிமையான கடவுள் வேறு இல்லை என்றே சொல்லலாம். சாதாரணமாக மஞ்சள் தூளிலோ, சாணத்திலோ, களிமண்ணிலோ பிடித்து வைத்து, சிறிது அறுகம்புல்லை செருகினாலே போதும், உடனே அங்கே பிரசன்னமாகிவிடுவார் விநாயகர்.

*  அறுகம்புல்லை சம்ஸ்கிருதத்தில் `தூர்வா' என்பர். அறுகம்புல், வழிபாட்டில் மட்டுமின்றி சித்த வைத்தியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அறுகம்புல் சாறு பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி வளர்ந்திடும்.

*   விநாயகர் வழிபாட்டில், எள் உருண்டை, எள் சாதம், எள் கொழுக்கட்டை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. எள்ளும் வெல்லமும் கலந்து சாப்பிட்டால், உடல் பலமாகும்.

*   விநாயகரை வெள்ளெருக்கம் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடு வது விசேஷம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். வெள்ளெருக்கு விநாயகரை 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால், நவகிரக தோஷங்கள் விலகும்.

*   விநாயகருக்கு செவ்வாய்க் கிழமையன்று வெற்றிலை மாலை சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்குப் பாதிப்பு வராது. 102 வெற்றிலைகளை இரண்டிரண்டு வெற்றிலையாக மடித்து 51 முடிச்சுகளாக்கி, வாழை நாரினால் மாலையாகக் கட்டி விநாயகருக்கு அணிவித்து வழிபட வேண்டும்.

*   விநாயகருக்கு செவ்வாய்க்கிழமைகளில் செம்பருத் திப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும்  சிறப்பாகும். அதேபோல், அரளிப்பூக்கள் கொண்டும் வழிபடலாம். செடியிலிருந்து பறித்ததும் சுமார் மூன்று மணி நேரமே வாடாமல் இருக்கும் அரளிப் பூ. ஆகவே, இந்த பூக்களை பறித்ததும் உடனே மாலையாகக் கோத்து  விநாயகருக்கு சமர்ப்பித்துவிடுங்கள்.

*   சிதறு தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டால், நம்மை பீடித்திருக்கும் துயரங்கள் விநாயகரின் திருவருளால் சிதறிப்போகும் என்பது நம்பிக்கை.

- எஸ். கதிரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism