

குடை அரசச் சின்னங்களில்முதன்மையானது. அரசனுடைய குடை வெண்கொற்றக்குடை என அழைக்கப்படுகிறது. கொற்றம் என்பது பாதுகாப்பது என்ற பொருளைத் தருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடைகள் தூய தருமத்தின்வடிவாக வெண்ணிறத்துடன் இருப்பதாலும், குளிர்ந்த நிழல் பரப்புவதாலும் அவற்றை முழுவட்டச் சந்திரனுக்கும், முத்துத் தொகுதிக்கும் உவமானமாகச் சொல்லப்படுள்ளன.

கேரளக் குடைகள் உலகப் புகழ் பெற்றவையாகும். ஆதியில் இவை தாழை மட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டன. இதையொட்டி தாழங்குடைகள் என அழைக்கப்பட்டன.

சென்னை கபாலீசுவரர், வெள்ளீசுவரன் முதலிய ஆலயங்களில் பிட்சாடன மூர்த்தி பவனி வரும் போது கந்தர்வன் பட்டுக்குடை பிடித்துக் கொண்டு பறந்து வருவது போல அமைத்துள்ளனர்.

அஷ்ட மங்கலங்களில் ஒன்றாகக் குடை விளங்குகிறது. இதை இந்திரக் குடை என அழைப்பர். தெய்வ ஊர்வலங்களில் வெண்ணிற முத்துக்களால் ஆன குடையை ஏந்தி மேனகை வருகிறாள் என்று கூறுகின்றனர்.

ஜலந்தர வதராகச் சிவபெருமான் வரும் போது வேதியன் வடிவில் வருகிறார். அப்போது குடையும் கமண்டலமும் கொண்டவராகக் காட்சியளிக்கிறார். பெருமாளின் வாமன அவதாரத்திலும் குடையழகு பெரிது போற்றப்படும்.