Published:Updated:

‘சகலமும் கிடைக்கும்!’

‘சகலமும் கிடைக்கும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘சகலமும் கிடைக்கும்!’

‘சகலமும் கிடைக்கும்!’

‘சகலமும் கிடைக்கும்!’

‘சகலமும் கிடைக்கும்!’

Published:Updated:
‘சகலமும் கிடைக்கும்!’
பிரீமியம் ஸ்டோரி
‘சகலமும் கிடைக்கும்!’

பிரசவவலியால் துடித்த பெண் பக்தைக்கு, தாமே தாயாக வந்து பிரசவம் பார்த்து அருள் செய்த காரணத்தால், அருள்மிகு தாயுமானவ ஸ்வாமி எனும் திருநாமத்துடன் சிவனார் கோயில் கொண்டிருக்கும் அற்புத க்ஷேத்திரம், திருச்சிராப்பள்ளி.

‘சகலமும் கிடைக்கும்!’

அற்புதமான இந்தத் திருத்தலத்தில், சக்தி விகடன்-தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் மற்றும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தும் திருவிளக்குபூஜை, கடந்த 10.1.17 செவ்வாய்க்கிழமை அன்று வெகுசிறப்பாக நடந்தேறியது. திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், தஞ்சாவூர், கும்பகோணம் முதலான வெளியூர்களில் இருந்தும் திரளான வாசகியர் வந்திருந்து, விளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். கோயிலின் மணிகண்ட குருக்கள் மிகச் சிறப்பாக விளக்குபூஜையை நடத்திவைத்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் திருச்சி; புகுந்த வீடு தஞ்சாவூர். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காகவே புறப்பட்டு வந்தேன். தீப ஜோதியில் அந்தத் தாயுமானவரையே தரிசித்த திருப்தி எனக்குள். எல்லோரும் சுபிட்சமா இருக்கணும். பிரச்னைகளும், துயரங்களும் இல்லாத சூழல் வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டேன். எல்லோரும் நலம் பெற்றால் நாமும் அதில் சேர்த்தி தானே’’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக கூறினார், தஞ்சாவூர் வாசகி சிவப்பிரியா.

‘‘நல்லா படிக்கிறேன். இன்னும் நல்லா படிக்கணும், நல்ல மார்க் வாங்கணும்னு வேண்டிக்கிட்டேன்’’ என்று மழலை மொழியில் தனது பிராத்தனையை பகிர்ந்து கொண்டார், திருச்சியைச் சேர்ந்த சிறுமி சுபாஷினி.

‘‘எப்போதும் பொதுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். அந்த வகையில், சக்தி விகடன் நிகழ்த்தும் திருவிளக்கு பூஜை மகத்துவமானது. இதில் கலந்துகொண்டாலே போதும்; நாம் கேட்காமலேயே சகலமும் கிடைக்கும்’’ நம்பிக்கையுடன் சொன்ன பெரம்பலூர் வாசகி சங்கீதா, தனது மனமார்ந்த நன்றியையும் பகிர்ந்துகொண்டார்.

நம்பிக்கையுடன் கலந்துகொண்ட வாசகியர் ஒவ்வொருவரது பிரார்த்தனையும் நிச்சயம் பலிக்கும்; தாயுமானவர் திருவருளால் அவர்கள் நினைத்தது நடக்கும்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்