பேராசைக்கும் சுயநலத்துக்கும் சின்னமாக இருப்பதால், நரிகளைப் பற்றிய செய்திகள் சமய நூல்களில் இல்லை. எனினும், ஞானிகள் பலரும் நரிகளின் கதைகள் மூலம் பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள்.

மாணிக்கவாசகர் சரிதத்தில், நரிகளைப் பரிகளாக்கிச் சிவனார் அருளாடல் புரிந்த கதை நாமறிந்தது. பேராசையால், இருந்ததையும் தொலைத்துத் துன்புற்ற நரியின் கதையை தனது பாடலில் சொல்லியிருக்கிறார் அப்பர் பெருமான். `வேடியப்பன்' என்ற கிராமிய தெய்வத்துக்கு நரியே வாகனமாகத் திகழ்கிறது!

சீவகசிந்தாமணியை அருளிய திருத்தக்கதேவர், தன்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி, நரியின் குணங்களை ஆதாரமாகக் கொண்டு 51 பாடல்களைக் கொண்ட நூலைப் பாடியதாகக் கூறுவர்.

ஒன்றைச் செய்யவேண்டுமானால் அறத்தைச் செய்யவேண்டும்; ஒன்றைத் தவிர்க்கவேண்டுமெனில் கோபத்தைத் தவிர்க்கவேண்டும்; அறிய விரும்பினால் ஞானத்தை அறியவேண்டும்; கடைப்பிடிக்க விரும்பினால் விரதத்தைக் கடைப்பிடிக்கவும் என்கிறது நரிவிருத்தப் பாடல் ஒன்று.

நரியை வடமொழியில் `சம்பு' என்று அழைப்பார்கள். நரிக் கூட்டங்களுக்கு இடையே தோன்றி வாழ்ந்த முனிவர் ஒருவர் `சம்புகன்' எனப் பெயர்பெற்றிருந்தார்.

மன்னர் வரகுணபாண்டியன், திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வந்த காலத்த்தில், நரிகள் பெரிதாக ஊளையிட்டனவாம். அதைக் கேட்ட பாண்டியன், அவை சிவனாரைப் போற்றுவதாகவே கருதி, அவற்றுக்கு ஆடையும் முத்துமாலையும் அணிவித்து மகிழ்ந்ததாகக் கதையுண்டு.