`மாயூர புராணம்' ஆகிய மயிலாடுதுறை திருத்தலத்தின் புராணம், அந்தத் தலத்தில் கழுதை வழிபட்டு அருள்பெற்ற கதையைச் சொல்கிறது. சாபத்தின் காரணமாகக் கழுதை உருவம்பெற்ற சிங்கத்துவஜன் என்ற அரசன், மயிலாடுதுறைக்கு வந்து, இடப தீர்த்தத்தில் நீராடி, தேவ உருவம் பெற்றதாக விவரிக்கிறது அந்தப் புராணம்.

திரிவிரிஞ்சிபுரம் தல புராணமும் கழுதை முகம்கொண்ட அசுரன் ஒருவன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்ட கதையைச் சொல்கிறது. கழுதையை வடமொழியில் ‘கரம்’ என்பார்கள். இதையொட்டி இந்தத் தலத்துக்கு ‘கரபுரி’ என்றொரு பெயரும் உண்டு.

சமய உலகில் கழுதைகள் பற்றிய செய்திகள் அதிகம் இல்லை. ஜேஷ்டாதேவியின் வாகனமாகக் கழுதையைச் சித்திரிக்கின்றன புராணங்கள். கழுதையை மங்கல வடிவமாகக் கொள்வதில்லை என்றாலும், அதன் கனைப்பொலியைச் சுப சகுனமாகச் சொல்வர்.

குதிரை இனத்தைச் சார்ந்தது என்றாலும் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தது கழுதை. அதன் மூக்கில் வெள்ளை படர்ந்திருக்கும். அதனால் அதை வெள்ளி மூக்குச் சிங்கம் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமான் கழுதைக்கு அருள்செய்த திருக்கதையைத் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.