
அம்பிகைக்கு நந்தி வாகனம்!
கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது, ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில். இந்த அம்பிகை, சர்வேஸ்வரனின் அம்சமாக அவரது மார்பில் இருந்தே தோன்றிய சக்தி என்பதால், இங்கு சிம்ம வாகனம் இல்லாமல் நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது வித்தியாசமானது.
முளைப்பயறு பிரசாதம்!
கல்யாண வரம் தரும் தலமாகத் திகழ்கிறது, தருமபுரி கல்யாண காமாட்சி ஆலயம். தருமராஜரால் வழிபடப்பட்ட இந்த தேவி 18 படிகளின்மீது நின்று அருள்பாலிப்பவள். ஆடிப்பூர நாளில் அன்னை காமாட்சிக்கு நடைபெறும் வளைகாப்பு விழாவில் காமாட்சி அன்னையின் மடியில் முளைப்பயிறு கட்டி வணங்கு வார்கள். பின்னர் குழந்தையில்லாத தம்பதியர் அந்த முளைப்பயிறு பிரசாதத்தைச் சாப்பிட்டு, குழந்தைப்பேறு பெறுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தாயமங்கலத்தில் அருளும் தாய்!
சிவகங்கை மாவட்டத்தின் சக்தி தலங்களில் குறிப்பிடத்தக்கது, தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயம். கன்னித்தெய்வமாக வழிபடப்படும் இந்த முத்துமாரி பக்தர்களைக் காக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள். கன்னிப்பெண் என்பதால் இவளுக்குத் தாலி அணிவிக்காமல் காலடியிலேயே வைத்து பூஜிக்கிறார்கள்.
- மு.ஹரிகாமராஜ்