இந்தப் பக்கத்தில் முனிவர்கள் பெயர்கள் சில இடம்பெற்றுள்ளன. அவர்களில், மாரியம்மன் திருக்கதையுடன் நெருங்கிய தொடர்புடையவர் யார்?

இதுதான் இந்த இதழுக்கான புதிர்க் கேள்வி.
உங்களுக்கு உதவியாக கீழே ஐந்து குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்த ஐந்து குறிப்புகளுக்கும் மிகப் பொருத்தமானவர் யாரோ, அவரே மாரியம்மன் திருக்கதையோடு நெருங்கிய தொடர்புடையவர்.
குறிப்புகள்:
* கோபக்காரர்
* இதிகாசக் கதாபாத்திரம்
* ராமனைச் சந்தித்தவர்
* அரச வம்சத்துக்குப் பகைவர்
* அவதாரம்
விடையாகக் கிடைக்கும் முனிவரின் பெயரை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். அத்துடன், அவர் குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், முனிவரின் மகிமை குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


அம்மன் புதிர்!
18.7.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை:
சமயபுரம்
சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:
தி.க.வேல்முருகன், திட்டக்குடி
ச.தசரதன், சென்னை
ஆர்.தங்கசுதாகர், பொன்மலை
த.தமயந்தி, அறந்தாங்கி
ம.கமலினி, கோவை
வி.ஹேமலதா, நெய்வேலி
கா.முத்துச்சாமி, திருவாடானை
எஸ்.பி.இந்திராணி, திருப்பூர்
ம.நிவாதா, சிக்கல்
எம்.சரஸ்வதி, கிருஷ்ணகிரி