Published:Updated:

ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!

ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!
பிரீமியம் ஸ்டோரி
ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!

அருண வசந்தன்

ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!

அருண வசந்தன்

Published:Updated:
ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!
பிரீமியம் ஸ்டோரி
ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!

சிவனார், அக்னி மண்டலத்துள் எப்போதும் நடனமாடிக்கொண்டிருப்பவர். இதை உணர்த்தவே தீச்சுடர்களுடன் கூடிய பிரபையை அவருக்குப் பின்னால் அமைப்பார்கள்.

த்துவப் பொருளாகத் திகழ்ந்த பிரபைகள் பிற்காலத்தில் பல மாறுதல்களைச் சந்தித்தன. பூ வேலைப்பாடுகள், சிம்ம முகம் போன்றவை இடம்பெறத் தொடங்கின. திருவாரூர் தியாகேசர் பிரபை வேலைப்பாடுகள் மிகுந்தது.

தெய்வத் திருவுருவங்களுக்குப் பின்னணியில் அரைவட்ட வடிவில் திகழும் அமைப்பை `பிரபை’ என்பார்கள். பிரபா என்ற சொல்லுக்கு ஒளி என்பது பொருள். சூரிய ஒளிக் கற்றையை `சூரிய பிரபை’ என்றும், சந்திரனின் ஒளி வெள்ளத்தை `சந்திர பிரபை’ என்றும் சொல்வர்.

ஆஹா... ஆன்மிகம்! - பிரபை!

றைவன் ஒளிமயமானவர். அவரிடமிருந்து அருள் எனும் ஒளி வெள்ளம் எங்கும் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும் என்பதைக் காட்டவே, இறையுருவங்களுக்குப் பின்னணியில் பிரபா மண்டலம் அமைப்பார்கள்.

ராஜகோபுர அடுக்குகளில் உச்சியில் அமையும் பகுதிக்குக் கண்டம் என்பது பெயர். அதன்மீது வண்டிக்கூரை போல் அமைவது பண்டியல் எனப்படும். இதன் இருபக்கங்களிலும் பிரபைகள் அமைக்கப்படுகின்றன. இவை பூதங்கள், அன்னங்கள்,  மலர்கள் முதலான சிற்பங்களோடு திகழ்கின்றன.

விழாக் காலங்களில் மூங்கில், வாழை மட்டைகளைக்கொண்டு பிரபைகளைச் செய்வதுண்டு. இதில் மலர்கள் அதிகம் இடம்பெறும். தொண்டை நாட்டு பூப்பிரபைகள் கலையழகு மிகுந்தவை. இவற்றை வண்டைய பிரபை என்பார்கள். அதேபோல் சம்பங்கி, சாமந்தி முதலான மலர்களை ஒட்டிச் செய்யப்படும் பிரபைகளை ஒட்டு பிரபை என்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism