பிரீமியம் ஸ்டோரி
ஆஹா... ஆன்மிகம்! - கோட்டம்!

கோயிலுக்குக் கோட்டம் என்றும் பெயருண்டு. வளைந்து வட்டமாக அமைந்த அடித்தளத்தின் மீது வட்டக் கூம்பு வடிவம் கொண்ட ஆலயம் கோட்டம் எனப்பட்டது. ஆதியில் அமைந்த ஆலயங்கள், வட்டமாக அமைந்த சுவர்களையே கொண்டிருந்தன.

சிலப்பதிகாரத்தில் வேற்கோட்டம், தேவர் தருக்கோட்டம், வெள்ளானைக் கோட்டம், ஆறுமுகச் செவ்வேள் கோட்டம் முதலான பல கோட்டங்கள் பூம்புகாரில் இருந்த தகவல் குறிக்கப்பட்டுள்ளது.

தேவாரத்தில் திருவையாற்றின் ஐயாராப்பர் ஆலயம் ‘காவிரிக் கோட்டம்’ என்று குறிக்கப்படுகிறது. சென்னை முத்துகுமாரசாமி கோயில் கந்தகோட்டம் என்றும், காஞ்சி முருகன் கோயில் குமரக் கோட்டம் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் காமகோட்டம் என்றும் வழங்கப்படுகின்றன.

ஸ்வரன் குடியிருக்கும் இடம் ஈஸ்வரம் எனப்பட்டது. அவ்வகையில் காவிரிபூம்பட்டினத்தில் பல்லவர்கள் அமைத்த ஆலயத்துக்கு பல்லவனீச்சரம் என்று பெயர். அதேபோல் கூரத்தில் உள்ள ஆலயம் அவனி பாஜன பல்லவேசுவரக் கிருகம் எனப்படுகிறது.

கோயிலுக்கு தளி என்றும் பெயர் உண்டு. தளம் என்றால் சீராக்கப்பட்ட உயர்ந்த இடம் என்று பெயர். அதையொட்டி மனதைச் சீராக்கும் ஆலயங்களை தளி என்று அழைத்தார்கள் போலும்! பழையாறை வடதளி, தென்தளி, கச்சி மேற்றளி ஆகியன இதற்கு தகுந்த சான்றுகள்.

வேறுசில பெயர்களும் கோயிலைக் குறிப்பதாகத் திகழ்கின்றன. `பள்ளி’ என்ற பெயரோடு திருச்சக்கரப்பள்ளி, செம்பொன் பள்ளி ஆகிய ஆலயங்களும், `வீரஸ்தானம்’ என்ற பெயரில் சிவனாரின் அட்ட வீரட்ட தலங்களும், `காரோணம்’ என்ற பெயரில் நாகைக் காரோணம், கச்சிக்காரோணம் ஆகிய தலங்களும் திகழ்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு