எழுத்துகளை அக்ஷரம் என்பர்; அழிவில்லாதது என்று பொருள் சொல்வர். சைவ சித்தாந்தங்கள் எழுத்துகளை ‘வன்னங்கள்’ என்கின்றன. உலகப் படைப்புக்கு மூலமாக வழங்கும் ஆறு அத்துவாக்களில் வன்னமும் ஒன்று.

பஞ்சாட்சரம் என வழங்கும் `நமசிவாய' எனும் ஐந்தெழுத்துகளும் சிவனாரின் நடராஜ திருமேனியாக விளங்குவதாகக் கூறுவர். அதேபோல் ‘ங’ என்ற எழுத்தைக் காளையின் உருவமாகக் கொள்வர்.
அப்பர் சுவாமிகள் ‘ஙகரவெல்கொடியாய்’ என்று சிவபெருமானைத் துதிக்கிறார்.

காளிங்க நாகம் ‘ல’ போன்று வளைந்து நெளிந்திருக்க, அதன் மீது கண்ணன் நாட்டியமாடினான் என்று சித்திரிக்கிறார் பாம்பன் சுவாமிகள். ‘ய’ எனும் எழுத்து சூலம்போல் உள்ளது என்பதை ‘யகரமேபோல் சூலம் ஏந்தும் நறும்புயன்’ என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள்.

அக்ஷரங்களில் முதன்மைபெற்றது ஓம்காரம் என்பர். அகரம், உகரம், மகாரம் ஆகியவற்றின் கூட்டமைப்பே ஓம்காரமாகும். இவற்றில் அகரம் - படைத்தலையும், உகரம் - காத்தலையும், மகாரம் - அழித்தல் அல்லது ஒடுங்குதலையும் குறிக்கும். ஆக, ஓம் முத்தொழிலையும் குறிப்பது. இதன் அதிதேவதை விநாயகர். அதேபோல் `ஈம்’ என்பதை காமகலாமேசுவரி பீஜம் என்பர்.

ஆதிநாள்களில் எழுத்துகளுக்கு அவற்றின் தெய்வத் தன்மையை விளக்கும் வகையில் உரிய வரி வடிவங்களை அமைத்தனர். கால மாற்றத்தில் வடிவங்கள் மாறிவிட்டன என்றாலும் பல இலக்கியங்களின்மூலம் வரி வடிவங்களின் பெருமையை அறியமுடிகிறது.