Published:Updated:

அன்பார்ந்த வாசகர்களே...

அன்பார்ந்த வாசகர்களே...
பிரீமியம் ஸ்டோரி
அன்பார்ந்த வாசகர்களே...

அன்பார்ந்த வாசகர்களே...

அன்பார்ந்த வாசகர்களே...

அன்பார்ந்த வாசகர்களே...

Published:Updated:
அன்பார்ந்த வாசகர்களே...
பிரீமியம் ஸ்டோரி
அன்பார்ந்த வாசகர்களே...

ணக்கம். இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்பார்ந்த வாசகர்களே...

உங்கள் ‘சக்தி விகடன்’, 16-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘அறிவு, எண்ணம், சொல், செயல் இந்த நான்கினையும் ஒருங்கிணைக்கும் பயிற்சிதான் ஆன்மிகம்’ என்கிறார் காஞ்சி மாமுனி. அந்த மகான் காட்டிய வழியில், ஆன்மிகப் பயணத்தில் உங்கள் சக்தி விகடன் தொடர்ந்து உற்சாகமாகப் பீடு நடைபோட்டு வருவதற்கு முக்கியக் காரணம், அக்கறையுடன் கூடிய உங்களின் வழிகாட்டலே!

இதழ்ப் பணிகளில் மட்டுமல்ல, சக்திவிகடன் முன்னெடுத்து வரும் இறைப் பணிகளிலும் உங்களின் ஒத்துழைப்பு மகத்தானது. ஒவ்வொரு தருணத்திலும் சக்தி விகடனின் பணிகள் குறித்த நிறைகுறைகளை அன்போடு சுட்டிக்காட்டி, ஊக்கப்படுத்திவருகிறீர்கள்; ஆலோசனைகள் சொல்லி எங்கள் பணிகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள உதவுகிறீர்கள். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எங்களின் இதயங்கனிந்த நன்றியை இந்த நேரத்தில் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இன்னும் சில மகிழ்ச்சியான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

நம் சிந்தையைச் செம்மைப்படுத்தி, மனதுக்கு மலர்ச்சியை அளிக்கும் வகையில், ஆறு புதிய தொடர்கள் இந்த இதழில் ஆரம்பமாகின்றன.

உலக வாழ்க்கைக்கு வேதசாஸ்திரங்கள் சொல்லும் வழிகாட்டல்கள் ஏராளம். அந்தப் பாற்கடலைக் கடைந்து சேகரித்த அமிர்தமாக - அரிய பொக்கிஷத் தகவல்களை `ஆதியும் அந்தமும்’ எனும் தலைப்பில் தருகிறார், மகாமகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

ஊர் ஊராக அலைந்து திரிந்து, பண்டைய தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களைத் தேடித் தேடிக் கண்டடைந்து, நமக்கு மீட்டுத் தந்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். அவரின் அரும்பணிக்கு ஒப்பானவை, அடையாளம் காண இயலாதபடி மறைந்துபோன திருப்புகழ்த் தலங்கள் குறித்த ‘திருப்புகழ் அமுதன்’ வலையப்பேட்டை ரா.கிருஷ்ணனின் தேடலும் பயணமும். சிலிர்ப்பூட்டும் அவரது இந்த நெடும் பயணத்தின் அனுபவத் தொகுப்பாக மலர்கிறது `கண்டுகொண்டேன் கந்தனை’ எனும் புதிய தொடர்.

விரத வழிபாடுகளை, திருத்தல தரிசனத்தை, புராணக் கதைகளை உரிய காரண காரியங்களோடு விளக்கி வழிகாட்டப்போகிறது, இறையருளரசி வி.ஆர்.சுந்தரி எழுதும் `சக்தி கொடு’.

எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ். எழுதும் `நினை அவனை’ தொடர், ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தத்தின் மகிமையை நுட்பமாக நமக்கு விளக்கிச் சொல்லும்.

சமகால இறைத் தொண்டர்களின் பணிகளும் பயணமும் மகத்தானவை. அவற்றை நம் உள்ளம் இனிக்கச் சொல்லப்போகிறது, மு.ஹரிகாமராஜ் எழுதும் ‘புண்ணிய புருஷர்கள்’.

மேலும், `திருவருள் திருவுலா’ எனும் புதிய பகுதியும் இந்த இதழில் தொடங்குகிறது. பதினாறு பேறுகளை அருளும் பதினாறு கோயில்கள் குறித்த தகவல் தொகுப்பு இந்த இதழில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்களில், வாசகர்களாகிய உங்களின் பங்களிப்போடு, மாவட்டந்தோறும் திகழும் அரிய பல அபூர்வ கோயில்களின் தகவல் தொகுப்பு இந்தப் பகுதியில் இடம்பெறும். படியுங்கள்; ரசியுங்கள். வழக்கம்போல், உங்களின் மேலான கருத்துகளைத் தயங்காமல் உடனுக்குடன் எங்களோடு மட்டுமின்றி, உங்களைச் சார்ந்தோரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கேற்ப, நாம் பெறும் இந்த ஆன்மிக அனுபவத்தை மற்றவரோடும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டு, சிலிர்ப்பும் சிறப்புமாய் இறைப்பணியில் இணைந்து பயணிப்போம்!

மிக்க அன்புடன்,

ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism