Published:Updated:

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

Published:Updated:

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

"கொடியேற்றத்துடன் தொடங்கியது காவிரி துலாக்கட்ட கடைமுழுக்கு தீர்த்தவாரி!"

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில், ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

காவிரி துலாக்கட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத இறுதியில் கடைமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த வருடத்துக்கான தீர்த்தவாரி, ஐப்பசி அமாவாசை திதியான  இன்று (7.11.18) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த நாள்களில் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள், காவிரி துலாக்கட்டத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்கின்றன என்பது ஐதீகம். 

பிரசித்திபெற்ற தீர்த்தவாரி விழாவுக்கு, மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற ஐந்து திருத்தலங்களான அபயாம்பாள் சமேத மயூரநாதர் ஆலயம், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோயில், ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் ஆலயம், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பரிமள ரங்கநாதர் ஆலயம் ஆகியவற்றில் இன்று சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்த விழாவின் பிரதான ஆலயமான மயூரநாதர் கோயிலில், வரும் 11 -ம் தேதி சகோபுர தரிசனமும் அதைத் தொடர்ந்து 13 -ம் தேதி, மயூரநாதர் திருக்கல்யாண வைபவமும், 15 - ம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. இந்த விழாவின்  ஒன்பதாம் நாளான 16 -ம் தேதி, காவிரி துலாக்கட்டத்தில் கடைமுழுக்குத் தீர்த்தவாரியும், 17 - ம் தேதி முடவன் முழுக்கு தீர்த்தவாரி பெருவிழாவும் நடைபெற உள்ளது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்த்தவாரி உற்சவ விழாவுக்கு முன்னேற்பாடுகள்குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  ''தீர்த்தவாரி உற்சவ விழா நாள்களில் நடைபெறும் தேர் பவனியின்போது, தேர் செல்லும் நான்கு வீதிகளையும் சீரமைத்துத் தரவும், விழாக் காலத்தில் பாதுகாப்புப் பணிக்குக் கூடுதல் காவல் துறையினரை பணியமர்த்தவும், பள்ளி கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் உதவியுடன் பொதுமக்கள் செல்லும் வழியில் ஏற்படும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும்  மற்றும் துலாக்கட்ட உற்சவ நாள்களில் காவிரியில் சீராகத் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கவும் எனப்  பல கோரிக்கைகள், கோயில் நிர்வாகம் சார்பாக முன்வைக்கப்பட்டன.  ஆட்சியர் சார்பில், "காவிரியில் தீயணைப்புத் துறையினர் மீட்புப் படகுகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு எந்தவித இடரும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.