தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

ஆனிச் சுவாதி  விழா கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி கோயில் பெரியாழ்வார் சந்நிதியில் ஆனிச் சுவாதி  விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 14-ம் தேதி காலை 10:40 மணிக்கு பெரியாழ்வார் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதங்கள் முழங்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாள்கள் நடக்கும் இவ்விழாவில், தினமும் காலை 10 மணிக்கு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், மாலையில் வீதியுலா ஆகியன வைபவங்கள் நடைபெறும். ஜூன் 22-ம் தேதி காலையில் செப்பு தேரோட்டம் நடைபெறும்.

திருத்தங்கல் உற்சவம் ஆரம்பம்:

திருமகள் தங்கி தவமியற்றிய திருத்தலம் என்பதால் திருத்தங்கல் என்ற பெயரானது. திருத்தங்காலப்பன் என்ற பெயரில் அருளும் நின்ற நாராயணப் பெருமாள் ஐந்து தேவியரோடு இங்கே அருள்பாலிக்கிறார். குடைவரைக் கோயிலில் வீற்றிருக்கும் இந்த பெருமாளை பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்து வழிபட்டிருக்கிறார்கள். திருத்தங்காலப்பன் இங்குதான் ஜாம்பவதியை திருமணம் செய்துகொண்டாராம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலின் உற்சவ ஆரம்பம் 23.6.18 அன்று தொடங்குகிறது.

 நெல்லையப்பர் ரதோத்ஸவம்

நெல்லை மாவட்டத்தின் புகழுக்குரிய அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் ஆலயத்தின் ஆனிப் பெருந்திருவிழா ஜூன் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நெல்லையப்பர் திருத்தேரோட்ட விழா 27-ம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலையில் நெல்லையப்பரும் காந்திமதி அம்மையும் தனித் தேர்களில் வீற்றிருக்க இந்த விழா தொடங்கும். கோயில் யானை முன்னே செல்ல, தேவார திருவாசக முழக்கங் களுடன் கோயிலின் மாடவீதிகளில் உலா வரும் திருத்தேர், மாலை 4 மணியளவில் நிலைக்குக் கொண்டுவரப்படும். அன்றைய தினமே நெல்லையப்பரும், காந்திமதியம்மனும் சப்தாவர்ண பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

சபரிமலை நடை திறப்பு

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணி முதல் 21-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறக்கப்படும்.

விழாக்கள் விசேஷங்கள்!

திருவண்ணாமலை கிரிவலம்

ஜூலை மாதம் 26- ம் தேதி வியாழக்கிழமை இரவு 12.20 மணி முதல் 27-ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 2.25 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத கிரிவலம் அம்பிகையின் ஆசியைப் பெற்றுத் தரும்.

 - ஹரிகாமராஜ்