ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

மனம் மலரட்டும்

மனம் மலரட்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் மலரட்டும்

மனம் மலரட்டும்

சாந்தஸ்ய சுகம் - சாந்தி யாருக்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் சுகம்.

நாம் சுகத்தைத் தேடுகிறோம்; ஆனால் சாந்தியைத் தேடவில்லையே! `சாந்தி' என்பது நமது கலாசாரத்தை மட்டுமே சேர்ந்தது. உலகின் வேறு எந்த கலாசாரத்திலும் சாந்தி பற்றிய சிந்தனை
இல்லை. 

மனம் மலரட்டும்

நெருப்பு எரிகிறது... எதுவரை எரியும்...நீங்கள் அதற்கு எரிபொருள் போடும் வரை எரியும். அதை நிறுத்தியதும் சமன் ஆகிவிடும். அதுபோல், மனிதனுக்கு ‘வேண்டும்... வேண்டும்...’ என்ற வெறி இருக்கும்வரை, அந்தப் பற்றாக்குறை இருக்கும்வரை `அசாந்தி' எனும் அமைதியின்மை இருக்கும்.

இப்படியான நிலையில், நீங்கள் சகல செல்வங்களைப் பெற்ற ஒருவராக இருந்தாலும் மனதில் சாந்தி இருக்க வாய்ப்பில்லை.

`பூ சாந்தி... த்யெள சாந்தி... அந்தரிக்‌ஷ சாந்தி...' என்று வேதம் பிரார்த்திக்கிறது.

அனைத்துப் பிரார்த்தனைகளும் ‘ஒம் சாந்தி சாந்தி சாந்தி’ என்று ஓதியே நிறைவு செய்யப்படுகின்றன.

`சாந்தி' எனும் பதம், ஏன் இப்படி  மூன்று முறை கூறப்படுகிறது?

நமக்கு நம்முடைய பிரயத்தனத்தால் மட்டுமே ஒரு விஷயம் கிடைக்காது என்று தீர்மானிக்கும்போதுதான் நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். அதாவது, நம்மால் முடியாதபோது இறையை நாடுவது வழக்கம். எனில், இங்கே `சாந்தி... சாந்தி... சாந்தி...' என்று மும்முறை கூறி, பிரார்த்தனை செய்கிறோம் என்றால், அது அவ்வளவு எளிதில் கிடைக்காது என்றல்லவா பொருளாகிவிடும்!

மனம் மலரட்டும்

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். சாந்தி என்பது ஏற்கெனவே நம்மிடம் இருப்பதே. மனிதனின் இயல்பு சாந்தியே. ஆத்மா நித்யசுகமானது. நித்ய சாந்தி உடையது.

ஆனால், சூழ்நிலைகள் மாறுவதாலும் சாந்தியைக் குலைக்கக்கூடிய புதிய ஒன்று உள்ளுக்குள் தோன்றுவதாலும் சாந்தி குலைந்து அசாந்தி ஏற்படுகிறது.

உள்ளே அழுத்தம் இருக்கும்போது பொறுமை எப்படி வரும்!

நமக்கு மூன்று வகையில் அசாந்தி ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

முதலாவது அதிதெய்வம். அதாவது, நம் கையில் இல்லாத விஷயங்கள். நம் கட்டுப் பாட்டில் இல்லாத சூழ்நிலைகளின் காரணமாக ஏற்படும் துன்பம், அதிதெய்வம் எனப்படும். உதாரணம் பூகம்பம். இதற்கு யார் காரணம்? இது பொதுவான கர்மப் பலன். இவ்வாறான பிரச்னைகள் ஏற்படவேண்டாம் என்றுதான் முதல் சாந்தியை வேண்டுகிறோம்.

அடுத்தது, பிறரால் உண்டாவது - அதிபூதம்.  அதாவது, நமக்கு வெளியே உள்ள சூழ்நிலை களால் உண்டாகும் பிரச்னைகள்.

மனம் மலரட்டும்

மூன்றாவது அத்யாத்மம். அதாவது தன்னிடமிருந்து வரக்கூடிய அசாந்தி. எறும்பு கடிப்பது அதிபூத அசாந்தி. ஆனால் `ஏன் என்னை மட்டும் கடிக்கவேண்டும்' என்று நினைப்பது அத்யாத்மம். அதேபோல்,  தன்னையே இழிவாக  நினைத்துக்கொள்வது, யார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அதையொட்டிய செயல்பாடுகள் ஆகியவையும் அத்யாத்மம் வகை அசாந்தியை ஏற்படுத்தும்.

அசாந்தியை கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங் களை நாம் தடுக்கவேண்டும். சாந்தியை ஏற்படுத்தக்கூடிய விசாரத்தை செய்யத் தொடங்கவேண்டும். சாந்தி பூரணம் பெற்றால் சுகமும் பூரணம் பெறும்.

- மனம் மலரும்...

தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்

சிறப்புச் சொற்பொழிவு!


க்தி விகடன் மற்றும் தயாலயா இணைந்து வழங்கும், `ஸ்ரீதயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீரிய சிந்தனைகள்' (மனம் மலரட்டும்-7) எனும் தலைப்பிலான வேதாந்த சொற்பொழிவு வைபவம், கோவை- ஆனைகட்டியில் அமைந்துள்ள ஆர்ஷவித்யா குருகுலத்தில் நடைபெறவுள்ளது. தயாலயா வேதாந்த ஆய்வு மையத்தின் ஆசார்யர் ஸ்ரீஜகதாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் தொகுப்புரை வழங்குகிறார். அன்பர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.

நாள்: 30.6.19 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 3:30 முதல் 5:30 மணி வரை.

இடம்: ஆர்ஷ வித்யா குருகுலம்,   ஆனைகட்டி, கோவை.  தொடர்புக்கு: 99651 55333