விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்!’

வி.ஐ.பி. பிள்ளையார்

‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்!’
##~##
'வா
ழ்க்கைல எந்த நல்லது கெட்டதுன்னாலும், உடனே ஓடிப்போய் நன்றி தெரிவிக்கிறதும் அங்கேதான்; முறையிடுறதும் அவர்கிட்டதான்! அவர் பேர் ஸ்ரீபாதாள விநாயகர்'' என்று தனக்கே உரிய பாணியில், ஒரு சொற்பொழிவு போல் பேசத் துவங்கினார், உபந்யாசகர் நாகை முகுந்தன்.

''சென்னை மடிப்பாக்கத்துல, மெயின் ரோட்ல இருக்கற ஸ்ரீபாதாள விநாயகர் எனக்குக் கண்கண்ட தெய்வம். ஒருகாலத்துல, ஏரியும் விளைச்சல் பூமியுமா இருந்த பகுதி இது. பக்கத்துல சின்னப் பசங்க கூட்டமா சேர்ந்து, மாடு மேய்ச்சுக்கிட்டிருந்தாங்களாம். அப்ப கிணறு வெட்றதுக்காக, அங்கே பள்ளம் தோண்டுற வேலை நடந்துச்சு. அந்தப் பள்ளத்துலேருந்து தோன்றியவர்தான் இந்த விநாயகர். அப்புறம் அருணாசல முதலியார்ங்கற அன்பர் ஊர்மக்களோட உதவியால, இங்கே அழகா ஒரு கோயில் கட்டி, விநாயகர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செஞ்சார்.

பள்ளத்துலேருந்து கிடைச்சதால, இவருக்கு பாதாள விநாயகர்னு திருநாமம் அமைஞ்சுச்சு. ஆனா ஒண்ணு... இவர் பள்ளத்துலேருந்து, பாதாளத்துலேருந்து வந்தவரா இருக்கலாம். ஆனா இவரை மனசார வேண்டிக்கிட்டவங்களை உசரத்துக்குக் கொண்டு போயிருவார்ங்கறதுதான் நிஜம்!

‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்!’

இதுக்கு உதாரணமா என்னையே எடுத்துக்கங்களேன்... 93-ஆம் வருஷம் இதோ... ஸ்ரீபாதாள விநாயகர் அருள்பாலிக்கிற இந்தப் பகுதிக்கு குடிவந்தேன். அப்ப, வாடகை வீடுதான் எனக்கு! தினமும்

ஆபீஸ் போகும்போது, இவரை தரிசனம் பண்ணிட்டுப் போறது வழக்கமாச்சு. ஒருகட்டத்துல, 'உன் பார்வையிலயே இருக்கிற எனக்கு, ஒரு வீடு கொடுப்பா’னு வேண்டிக்கிட்டேன்.  'சொந்தமா ஒரு வீடுங்கற என் கனவை நிறைவேத்தி வைப்பா’னு பிரார்த்தனை பண்ணினேன்.

அடுத்த சில நாட்கள்லயே... அவரோட சந்நிதிக்கு எதிர்லயே, அவர் பார்வையிலேயே... தனி வீட்டை அமைச்சுக் கொடுத்தார், பாதாள விநாயகர். இவர்கிட்ட வைச்ச எந்தவொரு வேண்டுதலும் நிறைவேறாமப் போனதே இல்லை. கருணையும் கனிவும் கொண்ட ஸ்ரீபாதாள விநாயகர்கிட்ட, நாம சரண்டர் ஆயிட்டா... வாழ்க்கைல உயரத்துக்குக் கொண்டு போய்விடுவார் நம்மை!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் நாகை முகுந்தன்.