Published:Updated:

சங்கடஹர சதுர்த்தி: அதிர்ஷ்டம் அள்ளித் தரும் அபூர்வ பூஜை குறித்து அறிந்துகொள்ள வேண்டியவை!

சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்

அறுகம்புல் முக்கியத்துவம் பெறும் வழிபாடு என்பதால், இதற்கு தூர்வாயுக்ம பூஜை என்ற பெயர் பொருத்தமே. வழிபாட்டுக்குமுன் அறுகின் மகிமையை அறிந்துகொள்வது அவசியம்.

Published:Updated:

சங்கடஹர சதுர்த்தி: அதிர்ஷ்டம் அள்ளித் தரும் அபூர்வ பூஜை குறித்து அறிந்துகொள்ள வேண்டியவை!

அறுகம்புல் முக்கியத்துவம் பெறும் வழிபாடு என்பதால், இதற்கு தூர்வாயுக்ம பூஜை என்ற பெயர் பொருத்தமே. வழிபாட்டுக்குமுன் அறுகின் மகிமையை அறிந்துகொள்வது அவசியம்.

சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்
அறுகம்புல்லைச் சமர்ப்பித்து விநாயகருக்குச் செய்யப்படும் வழிபாட்டை ‘தூர்வாயுக்ம பூஜை’ என்கின்றன ஞானநூல்கள்.

பிணிகள், காரியத் தடைகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமைமிக்க வழிபாடு இது. குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் விசேஷம்.

சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்
சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்

அறுகம்புல் மகிமைகள்...

அனலாசுரனை விழுங்கிய விநாயகரின் திருமேனி வெம்மையால் தகித்தது. குளிர் நிறைந்த சந்திரனை அவரின் திருமுடியில் சூட்டியும் வெப்பம் தணியவில்லையாம். இந்த நிலையில் முனிவர்கள் சிலர் அறுகம்புல்லை விநாயகரின் சிரசில் சமர்ப்பிக்க உடலும் உள்ளமும்  குளிர்ந்து விநாயகர் அகமகிழ்ந்தார். ஆக, பிள்ளையார் வழிபாட்டில் அறுகம்புல் முக்கிய இடம் பிடித்தது. அறுகம்புல்லின் மகிமை அளப்பரியது. அறுகம்புல் சமர்ப்பித்து ஆனைமுகனை வழிபட்டால், சகல சம்பத்துகளும் கிடைக்கும். கெளண்டின்ய முனிவர் அனுதினமும் அறுகம்புல்லால் அர்ச் சனை செய்து பிள்ளையாரை வழிபடுவார்.

எனினும் பூஜையால் பலன் கிடைக்கவில்லையே என்று அவரின் மனைவி புலம்பினாள். அவளிடம் ஒரு அறுகம்புல்லைக் கொடுத்து ``தேவேந்திரனிடம் சென்று இதன் எடைக்கு நிகராக பொன்னைப் பெற்று வா’’ என்று அனுப்பி வைத்தார் முனிவர்.
ரிஷிபத்தினியும் தேவேந்திரனிடம் சென்று விஷயத்தைச் சொன்னாள். அவன் குபேரனிடம் சென்று பெற்றுக்கொள்ளும்படி  கூறினான். ரிஷி பத்தினி குபேரப் பட்டணத்துக்குச் சென்றாள். குபேரனிடம் விண்ணப்பத்தைத் தெரிவித்தாள். தராசு கொண்டு வரப்பட்டு ஒரு தட்டி அறுகம்புல் வைக்கப்பட்டது. மறு தட்டில் பொன் ஆபரணங்கள் வைக்கப்பட்டன. 

சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்
சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்

 தராசுத் தட்டுகள் சமமாக வில்லை. குபேரன் தன் செல்வம் முழுவதையும் வைத்துப் பார்த்தும் பயன் இல்லை. ஒருகட்டத்தில் குபேரனும் மற்றுமுள்ள தேவர்களும் தட்டில் ஏறி நின்றும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லை. அப்போது அங்கே ரிஷபாரூடராகக் காட்சியளித்த சிவபெருமான், ‘‘தேவர்களே! அறுகம் புல்லின் மகிமைக்கு இணை எதுவும் இல்லை’’ என்று அறிவித்து உண்மையை உணர்த்தினார் என்கிறது திருக்கதை.
ஆம், `அறுகம்புல் கொண்டு நடத்தும் வழிபாட்டின் சிறப்புக்கும்  மூவுலகங்களும் ஈடாகாது. அதனால் சகல செல்வங்களும் கிடைக்கும். அறுகம்புல் கொண்டு வழிபாடு செய்யும் அன்பர்களுக்குக்  காம தேனுவும் கற்பகத் தருவும்கூட பணிவிடை செய்யும்’ என்பது சிவவாக்கு. இத்தகைய மகிமைமிக்க அறுகம்புல்லைச் சமர்ப்பித்து, சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட நம் சங்கடங்கள் எல்லாம் நீங்கும்; ஐங்கரன் அருளால் சந்தோஷம் நிலைக்கும்.

எப்படி வழிபடுவது?

மிக எளிமையானது இந்த வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வேளையில் பிள்ளையாரைப் பூஜிப்பது வழக்கம். வீட்டில்  உடல் உள்ளத் தூய்மையோடு பூஜைக்குத் தயார் ஆகவேண்டும்.
பூஜைக்கான இடத்தைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அறுகம்புல்லால் மேடை அமைப்பது இந்தப் பூஜையின் சிறப்பம்சம். மனைப்பலகை ஒன்றை அலங்கரித்து சந்தனக் குங்குமப் பொட்டு வைத்து, அருகம்புற்களைப் பரப்பி மேடை அமைக்கலாம்.அந்த மேடையில் விநாயகர் சிலைகள், திருவுருவப் படங்களை வைத்து வழிபடலாம். முறையாக வணங்கி பிள்ளையாரை பூஜையில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டு வழிபாட்டை ஆரம்பிக்கலாம். பிள்ளையார் பெருமானின் 21 திருநாமங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபடவேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்
சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்

விசேஷம் வாய்ந்த விநாயகர் திருநாம அர்ச்சனை
1. ஓம் பாசாங்குச தராய நம: 2. ஓம் கணாத்யாய நம: 3. ஓம் ஆகு வாகனாய நம: 4. ஓம் விநாயகாய நம: 5. ஓம் ஈச புத்ராய நம: 6. ஓம் சர்வ ஸித்திப்ரதாய நம: 7. ஓம் ஏக தந்தாய நம: 8. ஓம் இலவக்த்ராய நம: 9. ஓம் மூஷிக வாகனாய நம: 10. ஓம் குமார குரவே நம: 11. ஓம் கபில வர்ணாய நம: 12. ஓம் ப்ரும்மசாரிணே நம: 13. ஓம் மோதக ஹஸ்தாய நம: 14. ஓம் சுர ஸ்ரேஷ்டாய நம: 15. ஓம் கஜ நாசிகாய நம: 16. ஓம் கபித்த பலப்ரியாய நம: 17. ஓம் கஜமுகாய நம: 18. ஓம் சுப்ரசன்னாய நம: 19. ஓம் சுராஸ்ரயாய நம: 20. ஓம் உமா புத்ராய நம: 21. ஓம் ஸ்கந்த ப்ரியாய நம:
இந்த 21 நாமாவளிகளைச் சொல்லி முடித்ததும், தூப-தீப ஆராதனைகள் செய்து வணங்கலாம். நைவேத்தியமாக, மோதகம் படைக்கலாம் அல்லது வெல்லம் அவல் பொரிகடலை படைத்தும் வழிபடலாம்.

அறுகாமிர்தம்!

இந்த வழிபாட்டின்போது விரதம் இருப்பவர்களுக்கு, விசேஷ தீர்த்தம் வழங்குவது உண்டு. தீர்த்தத்தில் அறுகம்புல் இட்டு, அத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு அந்தத் தீர்த்தத்தை வழங்குவதுண்டு. இதை `கணேச அறுகாமிர்தம்’ என்பார்கள். இதனால் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் இந்த வழிபாட்டைச் செய்வதால் விநாயகரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அவரின் அனுக்கிரஹத்தால் தோஷங்கள், தடைகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளும் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.