Published:Updated:

சித்திரை‌த் திருவிழா ஜல்லிக்கட்டு: செம்பொன் நெருஞ்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய வீரர்கள்!

ஜல்லிக்கட்டு

அருப்புக்கோட்டை அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, ஐயனார் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Published:Updated:

சித்திரை‌த் திருவிழா ஜல்லிக்கட்டு: செம்பொன் நெருஞ்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய வீரர்கள்!

அருப்புக்கோட்டை அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, ஐயனார் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, ஐயனார் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 536 காளை உரிமையாளர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

மேலும் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாகத் துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர். ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போட்டி நடைபெற்றது.

களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். மேலும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, பாத்திரங்கள், மின்விசிறி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி உதவிக் காவல் கண்காணிப்பாளர் கருண் காரட், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.