Published:Updated:

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம் விநோத வழிபாடு!

செடில் உற்சவம்

கம்பத்தில் காத்தவராயன் வேடம் அணிந்த நபர் குழந்தையைத் தூக்கிக்கொள்ள முறையான பாதுகாப்புடன் செடில் சுற்றும் அன்பர்கள் செடிலை முன்னும் பின்னும் சுற்றினார். இந்தச் செடிலில் குழந்தைகளை ஏற்றுவதால் குழந்தைகளை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை.

Published:Updated:

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம் விநோத வழிபாடு!

கம்பத்தில் காத்தவராயன் வேடம் அணிந்த நபர் குழந்தையைத் தூக்கிக்கொள்ள முறையான பாதுகாப்புடன் செடில் சுற்றும் அன்பர்கள் செடிலை முன்னும் பின்னும் சுற்றினார். இந்தச் செடிலில் குழந்தைகளை ஏற்றுவதால் குழந்தைகளை நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை.

செடில் உற்சவம்

நாகப்பட்டினம் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். உலகப்புகழ் பெற்ற இந்தக் கோயிலில் அருள்மிகு நெல்லுக்கடை  மாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

செடில் உற்சவம்
செடில் உற்சவம்

இந்தக் கோயிலின் தலவரலாறு சுவாரஸ்யமானது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேப்பமரமும் அதனடியில் புற்று ஒன்றும் இருந்ததாம். அதன் அருகே ஒருநபர் நெல்லுக்கடை  வைத்திருந்தார். ஒரு நாள் மஞ்சள் ஆடை அணிந்த பெண் ஒருத்தி வந்து, 'தனக்கு நெல் வேண்டும்' என கேட்க கடை உள் நுழைந்த கடைகாரர் நெல்லை அளந்து எடுத்துக்கொண்டு திரும்பி பார்க்கையில் அந்த பெண் மறைந்துவிட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் அந்தப் பெண்ணை மறுபடியும் பார்க்க ஆசை கொண்டாராம். அன்று இரவு கனவில் தோன்றிய அம்மன், 'பெண் வடிவில் வந்தது தானே' என்றும் 'புற்றுக்கு அருகில் ஒருகோயில்கட்டினால் அங்கே எழுந்தருளி இந்த ஊரைக் காப்பேன்' என்றும் வாக்களித்தாளாம். அதை ஊர்மக்களிடம் தெரிவித்தார் நெல்கடைக்காரர். ஊர்மக்களும் அதை ஏற்று அதே  இடத்தில் கோயில் அமைத்து அம்மனை நெல்லுக்கடை மாரியம்மனாக வழிபடத் தொடங்கினர்.

நெல்லுக்கடை மாரியம்மன்
நெல்லுக்கடை மாரியம்மன்

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாரியம்மன் உடன் வலப்புறம் செல்லப்பிள்ளையாரும் இடப்புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். காத்தவராயன் மற்றும் பெரியாச்சி, அய்யனாரும் தனித்தனிச் சந்நிதிகளில் உள்ளனர், இங்கு நெல்லுக்கடை மாரியம்மன் மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சுமார் ஆறு அடியில் பிரமாண்டத் திருமேனியோடு நான்கு கரங்களுடன் மகாமாயியாக அமர்ந்த வண்ணம் காட்சியருளும் அன்னை அன்பே வதனமாகக் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் தயாபரியாக அருளாட்சி செய்கிறாள். இந்த அம்மனுக்கு வருடம் ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படும். அபிஷேகம் உற்சவ அம்மனுக்குதான் நடைபெரும்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்தக் கோயிலில்  கடந்த வாரம் காப்புக்கட்டி மற்றும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்திலும், ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளிக் காட்சி அளித்தார், அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடில் உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா நடைபெற்ற அன்று அதிகாலையிலேயே காத்தவராயனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

குழந்தை நலம் வேண்டி பிரார்த்தனை செய்துகொண்ட பக்தர்கள் கோயில் முன் அலங்கரித்து அமைத்திருந்த பிரமாண்ட செடில் அருகே கூடினர். கம்பத்தில் காத்தவராயன் வேடம் அணிந்த நபர் குழந்தையைத் தூக்கிக்கொள்ள முறையான பாதுகாப்புடன்  செடில் சுற்றும் அன்பர்கள் செடிலை முன்னும் பின்னும் சுற்றினார். இந்தச் செடிலில் குழந்தைகளை ஏற்றுவதால் குழந்தைகளை நோய் நொடி அண்டாது என்றும் நல்ல முறையில் வளரும் என்பதும் மக்களின் நம்பிக்கை.

நெல்லுக்கடை மாரியம்மன் தேர்
நெல்லுக்கடை மாரியம்மன் தேர்

அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள மிகப்பழைமையான  பிரம்மாண்ட தேரில் ஏறி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார் .இதை நாகை மாவட்ட ஆட்சியர் திரு அருண்தம்புராஜ் மற்றும் நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் இதனை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்குக் காவடி எடுத்தும் மாவிளக்கு ஏற்றியும், அலகு குத்தியும், மண் உருவச்சிலை வாங்கி வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.

இந்தப் புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் வரும் ஆண்டில் திருப்பணி நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் நாகை , திருவாரூர் காரைக்கால் வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.