Published:Updated:

தஞ்சைப் பெரிய கோயில்: சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் - `பெருவுடையாரே' கோஷம் முழங்கிய பக்தர்கள்!

தஞ்சாவூர் பெரியகோயில் ( ம.அரவிந்த் )

பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சதய விழா, சித்திரை விழா, நவராத்திரி விழா உள்ளிட்ட பல விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Published:Updated:

தஞ்சைப் பெரிய கோயில்: சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் - `பெருவுடையாரே' கோஷம் முழங்கிய பக்தர்கள்!

பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சதய விழா, சித்திரை விழா, நவராத்திரி விழா உள்ளிட்ட பல விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் பெரியகோயில் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 18 நாள்கள் விமர்சையாக நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 1-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில் உலகப் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. வானுயர்ந்த விமான கோபுரத்துடன் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து அழகுறக் காட்சியளிக்கும் பெரியகோயிலைக் காண்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

பெரியகோயிலில் ராஜராஜ சோழன் சதய விழா, சித்திரை விழா, நவராத்திரி விழா உள்ளிட்ட பல விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கியமானதாகக் கருதப்படும் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவரான சந்திரசேகர், விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
சித்திரை திருவிழா கொடியேற்றம்

நந்தி படம் அச்சிடப்பட்ட கொடி நான்கு ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மலர்களால் கொடி மரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாசார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாடினர். மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டுக் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது பக்தர்கள், 'பெருவுடையாரே' கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18 நாள்கள் வெகு விமர்சையாக சித்திரைப் பெருவிழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துக் கோயில் தரப்பில் கூறுகையில், ஸ்ரீ சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகள் கோயிலுக்குள் புறப்பாடாகிக் கொடியேற்றப்பட்டது.

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில்

18-ம் தேதியான நாளைக் காலை பல்லக்கிலும், மாலை சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. 19-ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தினமும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி வீதியுலா நடைபெற இருக்கிறது. வரும் மே மாதம் 1-ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அன்று, அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோயிலில் இருந்து தேருக்குப் புறப்படுவார்கள். பின்னர் காலை 6 மணிக்குமேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளிய நிலையில் திருத் தேரோட்டம் நடைபெறும். 4-ம் தேதி சிவகங்கைப் பூங்கா குளத்தில் தீர்த்தவாரியுடன் 18 நாள்கள் விழா நிறைவு பெறும் என்றனர்.