ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீகாமாட்சியின் பிரசாதம்!

ஸ்ரீகாமாட்சியின் பிரசாதம்!

ஸ்ரீகாமாட்சியின் பிரசாதம்!
##~##
தி
ருக்கோயில்களில்... குறிப்பாக அம்மன் கோயில்களில் சூரசம்ஹாரம், பாட்டுக் கச்சேரியுடன் விழா வைபவங்கள் நடக்கும். சிவாலயங்களில் 9 நாட்களும் ஒன்பது அலங்காரத்தில் அம்பாளை ஆராதிப்பது வழக்கம்.

காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தில் நவராத்திரியின்போது யாகசாலை பிரதிஷ்டை செய்து, தினமும் 2 வேளை ஸ்ரீவித்யா ஹோமம் நடைபெறும்.

மாலையில் உற்ஸவர் அம்பாள் புறப்பட்டு, நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருள்வாள். தொடர்ந்து... சூரசம்ஹார வைபவம். அசுரன் தலை, ரிஷி தலை, எருமைத் தலையுடன் மாறி மாறி வரும் மகிஷனை அம்பாள் சம்ஹார செய்யும் வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். அடுத்து, இன்னிசை கச்சேரியும் களைகட்டும்.

ஸ்ரீகாமாட்சியின் பிரசாதம்!

தினமும் காலை 11:00 மணிக்கு நவாவரண பூஜை நடக்கும். பிறகு கன்யா பூஜையும் சுமங்கலி பூஜையும் நடைபெறும்.  நவராத்திரி முழுக்க பூஜை முடிந்து வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதம் விசேஷம். பூஜை முடிந்ததும் தெளிக்கப்படும் சங்கு தீர்த்தமும் விசேஷம்!

நல்வரம் தரும் நவராத்திரியில் அம்பாளை வழிபடுவதுடன், அருகிலிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று கண்குளிர- உளம் மகிழ தரிசித்து வாருங்கள். ஆதிசக்தியின் அருளால் உங்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் கைகூட, அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்.