ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

'சரஸ்வதி கடாட்சம் நிறைஞ்சிருக்கும்!' - பாடகி சின்மயி

'சரஸ்வதி கடாட்சம் நிறைஞ்சிருக்கும்!' - பாடகி சின்மயி

'சரஸ்வதி கடாட்சம் நிறைஞ்சிருக்கும்!'  - பாடகி சின்மயி
##~##
''ந
வராத்திரியின் கடைசி மூணு நாட்கள்தான் ரொம்ப விசேஷமானது. அப்போ, எங்க வீட்ல பூஜைகளுக்குக் குறைவிருக்காது. வீட்டை சுத்தம் பண்றது என்ன, ஸ்வாமி படங்களுக்கு முன்னால மணிக்கணக்குல உட்கார்ந்து பூஜை செய்றது என்னன்னு அம்மா அசத்திருவாங்க; வீடே தெய்வாம்சமா நிறைஞ்சிருக்கிற தருணங்கள் அவை!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் பாடகி சின்மயி.

அவரின் அம்மா பத்மாசினி உற்சாகம் பொங்கப் பேசினார்... ''அதாவது, துர்காஷ்டமியிலேருந்து பூஜைகளைத் துவக்கறது எங்க வழக்கம். அன்னிலேருந்து மூணு நாட்களுக்கு, துர்கையைப் பத்திப் பாடுவோம்; ஸ்லோகம் சொல்வோம்; சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணி, வழிபடுவோம். அடுத்தது, சரஸ்வதி பூஜை. அந்த நாள்ல, சரஸ்வதிதேவியோட பெரிய படத்தை எடுத்து வைச்சு, அலங்காரம் பண்ணி, பூக்களால அலங்கரிச்சு, பக்கத்துல புத்தகங்கள், இசைக்கருவிகள் எல்லாத்தையும் அழகா அடுக்கி வைச்சு, ரொம்ப இன்வால்வ்மென்டோட பூஜை பண்ணுவோம். ஆத்மார்த்தமா பூஜை செஞ்சதோட பலன்தான், எங்க பொண்ணுக்கு சரஸ்வதி கடாட்சம் கிடைச்சிருக்குனு நம்பறேன்'' என்று நெக்குருகிப் பேசுகிறார் சின்மயி அம்மா.  

'சரஸ்வதி கடாட்சம் நிறைஞ்சிருக்கும்!'  - பாடகி சின்மயி

அவரே தொடர்ந்து பேசினார்...

''மறுநாள் விஜயதசமி அன்னிக்கி, பெரிய பொண்ணாட்டம் பட்டுப்புடவைலாம் கட்டிக்கிட்டு அவ பூஜை செய்றதைப் பார்க்கும் போது, மனசே நிறைஞ்சிரும், எங்களுக்கு! அவ்வளவு ஸ்பஷ்டமா, ஆத்மார்த்தமா பூஜை செய்வா.

அவளுக்கு நான் அம்மா மட்டுமில்ல; பாட்டுச் சொல்லிக் கொடுத்த குருவும் கூட! அதனால, அத்தனைக் குறும்புகளையும் ஓரமா வைச்சுட்டு, மேடம் எனக்கு குரு பூஜை பண்ணுவாங்க. அதுக்குப் பிறகு, பாட்டுப் பாடறதும் எழுதறதும் சம்பிரதாயம் - சடங்கு. அதனால, அவளும் தோழிகளுமா சேர்ந்து, தேவியைப் பத்தின பாடல்களைப் பாடுவாங்க, பாருங்க... அதைக் கண்மூடிக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்'' என்று அம்மா சொல்ல, சின்மயி முகத்தில் டாலடித்தன, சந்தோஷமும் உற்சாகமும்!

''பாட்டு சுகம்; பாட்டுக்கு அம்மாவும் குருவா இருந்தது கூடுதல் சுகம்'' என்று 'பஞ்ச்’ வைத்துச் சிரித்தார் சின்மயி.

- இரா.மங்கையர்கரசி