ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

'எனர்ஜி தரும் வைபவம்!' - டாக்டர் கமலா செல்வராஜ்

'எனர்ஜி தரும் வைபவம்!' - டாக்டர் கமலா செல்வராஜ்

'எனர்ஜி தரும் வைபவம்!' -  டாக்டர் கமலா செல்வராஜ்
##~##
''த
லைமுறை தலைமுறையா கொலு வைக்கிற வழக்கம் எங்களுது! சின்ன வயசுல, அம்மா கொலுவுக்கு ஆயத்தமாறதும், அந்த கொலு பொம்மைகளைப் பத்திரமா பாதுகாப்பா வைச்சுக்கறதும்... நினைக்க நினைக்க பிரமிப்பா இருக்கு. அந்த வயசுல, நானும் எங்க அக்காவும் களிமண்ணால பொம்மை செஞ்சு, அம்மாகிட்ட தருவோம். இதைச் சொல்லும்போதே, அந்த மண்ணோட ஈரத்தையும் வாசனையையும் இப்பவும் உணரமுடியுது!

அப்புறம்... நான், அக்கா, அக்கம்பக்கத்துல இருக்கற தோழிகள் எல்லாரும் சேர்ந்து, குறத்தி வேஷம் போட்டுக் கிட்டு நிப்போம். வீட்ல கலாட்டா முடிஞ்சதும், வரிசையா கொலு வைச்சிருக்கற வீடுகளுக்குப் போய், கை கொள்ளாத அளவுக்கு சுண்டல் வாங்கிட்டு வருவோம். இந்த நவராத்திரி கோலாகலம் என் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துச்சு. நானும் அம்மாவைப் போலவே கொலு வைக்க ஆரம்பிச்சேன். வருஷங்கள் ஓடஓட, கொலுவுல புதுமைகளைப் புகுத்த ஆரம்பிச்சோம். எஸ்கிமோஸ், ஜுராசிக் பார்க்னு குட்டீஸ்களுக்குப் பிடிக்கற மாதிரி, அவங்க குஷியாகற மாதிரி பல 'தீம்’களை எடுத்து, பொம்மைகளை நாங்களே தயாரிச்சு, கொலு வைச்சோம். அப்புறம், அந்த வருஷத்து டாப்பிகலான விஷயத்தை, கொலுவுல கொண்டு வர்றதையும் செய்ய ஆரம்பிச்சோம். அதுலேர்ந்து, ஒவ்வொரு வருஷமும், அந்த வருஷம் என்ன தீம்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே நிறையப் பேர் வர ஆரம்பிச்சாங்க.

'எனர்ஜி தரும் வைபவம்!' -  டாக்டர் கமலா செல்வராஜ்

உறவுகளை அழைச்சு ஒருநாள், ஆஸ்பத்திரி நண்பர்களை அழைச்சு ஒருநாள், அக்கம்பக்கத்துக்காரங்களை வரவழைச்சு ஒருநாள்னு, அந்த ஒன்பது நாட்களையும் கொண்டாடுறது நமக்கு புது எனர்ஜியைத் தரும்! எல்லாத்தையும் விட சந்தோஷமும் நிறைவும் என்ன தெரியுமா? என் மகளும், கொலு வைக்கறதுல ரொம்பவே ஆர்வமா இருக்கா; கொலு பொம்மைகளை வாங்கறதுலயும் சரி, அதைப் பத்திரப்படுத்துறதுலயும் சரி... அத்தனை நேர்த்தி அவகிட்ட! கிட்டத்தட்ட, இந்த விஷயத்துல அப்படியே அவங்க பாட்டியைக் கொண்டிருக்கா!'' என்று நெகிழ்ந்தும் வியந்தும் சொல்கிறார் கமலா செல்வராஜ்.

- இரா.மங்கையர்கரசி