ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

'ஆளுயர அனுமன் மிரட்டுவார்!' - எழுத்தாளர் இந்துமதி

'ஆளுயர அனுமன் மிரட்டுவார்!' - எழுத்தாளர் இந்துமதி

'ஆளுயர அனுமன் மிரட்டுவார்!' - எழுத்தாளர் இந்துமதி
##~##
''ந
வராத்திரின்னாலே 'கொலு வைபவம்’தான் கண் முன்னால வந்து நிக்கும். சின்ன வயசுலேர்ந்தே யார் வீட்ல என்ன கொலு வெச்சிருக்காங்கன்னு ஓடிப் போய் பாக்கறது என் வழக்கம். அங்கே, பெண்கள் கூட்டமா சேர்ந்து பேசிக்கறதும் சிரிச்சுக்கறதும் பாக்க நல்லாருக்கும். பின்னாடி கதை எழுதத் துவங்கும்போது, நவராத்திரி கொலுவுல அவங்க பேசிக்கிட்டிருந்த குடும்ப விஷயங்கள் மொத்தமும் எனக்குக் கதைக்கான கருவா, சின்னதொரு சம்பவங்களா உருவாச்சு; என் எழுத்துக்கு அது பலமாச்சு. நிறைய வீடுகள்... நிறைய கொலுக்கள்னு பார்த்திருந்தாலும், இன்னிக்கும் மனசுல அப்படியே பச்சக்னு இருக்கறது, நீலகண்ட சாஸ்திரிகள் ஐயா வீட்டு கொலுதான்!'' என்று ஆர்வத்துடன் பேசுகிறார், எழுத்தாளர் இந்துமதி.  
'ஆளுயர அனுமன் மிரட்டுவார்!' - எழுத்தாளர் இந்துமதி

''குழந்தைகள்லேருந்து பெரியவங்க வரைக்குமான ஆல் டைம் பிரமிப்பு, ராமாயணம்தானே?! ராமாயண நிகழ்வுகள் மொத்தத்தையும் கொலுவுல கொண்டு வர்றதுங்கறது, சாதாரணமா என்ன?! அவங்க வீட்டோட மூணு அறைகளையும் இணைச்சு, பிரமாண்டமா ராமாயணக் காட்சிகளை, பொம்மைகள் மூலமா, கதை போலக் காட்டியிருப்பாங்க. ஒரு ஆள் உசரத்துக்கு இருக்கற அனுமனைப் பாக்கவே பரவசமா இருக்கும்; பத்துத் தலையோட கொடூரமாக பல் காட்டிச் சிரிக்கற ராவணனைப் பார்த்தாலே அன்னிக்கித் தூக்கம் வராது.

லண்டன்ல இருக்கற மெழுகு மியூஸியத்துல நிக்கற மாதிரி உணர்வை, அவங்க வீட்டு கொலு தீம் கொடுத்திருக்கு, எனக்கு! இத்தனை வயசுக்கு அப்புறமும் கூட, அவங்க வீட்டுக்குப் போய் ராமாயணக் காட்சி கொலுவைப் பாக்கறதை வழக்கமாவே வைச்சிருக்கேன், தெரியுமா!'' என்று கண்கள் விரியச் சொல்கிறார் இந்துமதி.

- இரா.மங்கையர்கரசி