ஜகத் கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

. பொருள்: .ஜகத்தை உருவாக்குபவளும், ஜகத்தை ரட்சிப்பவளும், உலகை கடைசியில் சம்ஹரிப்பவளும், மகரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமாகிய தாயே... உன்னை வணங்குகிறேன்..
- நவராத்திரி வழிபாட்டின்போது, தேவி அஷ்டகத்தின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பாளை வழிபடுங்கள். இதனால் கிரக தோஷங்களும், சுமங்கலி கோபம், பசுவின் சாபம் போன்றவையும் விலகும். சகல நலன்களும் கைகூடும்.

தாய் கோயில் எனச் சிறப்புக்குரியது தகடூர் ஸ்ரீகாமாட்சி ஆலயம். தருமபுரிக்கு வடக்கே கோட்டை எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கே, மகிஷாசுரமர்த்தினியாய் கிழக்கு நோக்கி அருள்கிறாள், ஸ்ரீசூலினி ராஜ துர்கை. அபூர்வ தரிசனம் இது! பாண்டவர்களில் மூத்தவரான தருமர், இவளை வழிபட்டு இழந்த நாட்டை திரும்பப் பெற்றாராம். ராகு தோஷம் நீங்க, இவளை வழிபடுவது சிறப்பு.

மாங்காடு ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்தில் அர்த்தமேரு ஸ்ரீசக்ர தரிசனம் விசேஷம். 45 திரிகோணங்களுடன் திகழும் இந்தச் சக்கரம், 'அஷ்ட கந்தம்’ எனும் எட்டு வகை மூலிகைகளால் ஆனது. அபிஷேகம் கிடையாது; சந்தனம், புனுகு சார்த்தி வழிபடுகின்றனர். விஜய தசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

பெரும்பாலான ஆலயங்களில் ஸ்ரீதுர்கையின் பாதங்களின் கீழே மகிஷா சுரனின் தலை மட்டுமே இருக்கும். திருத்தணி அருகில் உள்ள மத்தூரில், துர்கையின் திருவடியில் மகிஷன் முழு உருவத்துடன் வீழ்ந்து கிடக்கிறான்.அவனது ஆணவத்தை அழித்ததுடன், அவனது உடம்பின் மீது துர்காதேவி ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஸ்தல புராணம் சொல்கிறது.

ஆதிகாலத்தில் பிரதிமை (திருவுருவம்) இல்லாமல், கும்பம் முதலா னவற்றில் தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்தனராம். சுரதன் என்ற மன்னன் காலத்திலிருந்தே பிரதிமை வைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது. இழந்த தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெறும் பொருட்டு, தேவியை பிரதிமை வைத்து வழிபட்டானாம் சுரதன். அது வசந்த காலம். இதையட்டியே தேவிக்கு வசந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் புகழ் பெற்ற தலம் போலார்- மங்களாதேவி ஆலயம். தன் தந்தையைக் கொன்ற மகாவிஷ்ணுவைப் பழிவாங்க எண்ணிய விகாஷிணி என்ற அரக்கி, கடும் தவம் இருந்தாள்; ’பராக்கிரமசாலியான மைந்தன் வேண்டும்’ என ஈசனிடம் வரம் பெற்றாள். அதன்படி அவளுக்குப் பிறந்தவன், குசுந்தகாசுரன்.

பெரியவனானதும் விஷ்ணுவுடன் போரிடச் சென்றான். நெடுங்காலம் நீடித்தது போர். ஒரு கட்டத்தில், கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொண்டான் அசுரன். அவனை வெளிக்கொணர, மங்களாதேவியை வேண்டினார் விஷ்ணு. தேவியும் ரக்தோஷ்வரியாக கடலுக்குள் சென்று,

அசுரனை மிரட்டி வெளியேற்றினாள். விஷ்ணு அவனை வதைத்தார். இதற்கு நன்றிக்கடனாக விஷ்ணுவால் கட்டப்பட்டதே போலார் ஆலயம். சிறந்த வாழ்க்கைத் துணை அமையவும், குடும்பம் தழைக்கவும் இங்கு வந்து தேவியை வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்.

தொகுப்பு: ஜி.ஜெயலட்சுமி, சென்னை-64
எஸ்.அபிநயா, காயக்காடு