ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

பூஜிக்க உகந்த நேரம்...

பூஜிக்க உகந்த நேரம்...

பூஜிக்க உகந்த நேரம்...
பூஜிக்க உகந்த நேரம்...

பூஷிக்க உகந்த நேரம்...

நவராத்திரி நான்கு வகைப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஸ்ரீராமநவமி வரை நடைபெறுவது வசந்த நவராத்திரி. மாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்குவது ராஜமாதங்கி நவராத்திரி. ஆடி அமாவாசைக்கு மறுநாள் துவங்குவது மகா வராஹி நவராத்திரி. புரட்டாசி வளர்பிறையில் துவங்கி அனுஷ்டிப்பது சாரதா நவராத்திரி! இந்த வருடம், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி, புதன்கிழமை (புரட்டாசி - 11) அன்று நவராத்திரி ஆரம்பம். அக்டோபர் 5-ஆம் தேதி புதன்கிழமையன்று (புரட்டாசி - 18) சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:00 மணி முதல் 12:00 மணிக்குள் ஏடு அடுக்கி, ஸ்ரீசரஸ்வதிதேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

##~##
ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் அக்டோபர் 6-ஆம் தேதி, வியாழன் அன்று (புரட்டாசி- 19) விஜயதசமி. அன்றைய தினம், காலை 7:00 மணிக்குமேல் பூஜித்து, ஏடு பிரிக்கலாம். விஜயதசமிக்கு மறுநாள் கொலுவை எடுத்து வைப்பது வழக்கம். இந்த முறை வெள்ளிக்கிழமை என்பதால், இரண்டு பொம்மைகளை அப்படியே சாய்த்து வைத்துவிட்டு, மறுநாள் (சனிக்கிழமை) பொம்மைகளை எடுத்து வைக்கவேண்டும்.