பிரீமியம் ஸ்டோரி

‘ஹோலி பண்டிகை’ நம் நாட்டில் பல காலமாக மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். முற்காலத்தில் இந்த ஹோலி பண்டிகை ‘வசந்த உற்ஸவம்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின் பின்னணியில் ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா என்பவள் அக்னி பகவானால் தகனம் செய்யப்பட்ட ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது.

 ஹிரண்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா என்பவள் அக்னியால் தான் எரிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்று வரம் பெற்றவள். ஆனால், தர்மத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடும்போது அவள் பெற்றிருந்த வரம் பயன் இல்லாமல் போய்விடும்.

ஹோலி கொண்டாடுவது ஏன்?

அரக்கன் ஹிரண்யகசிபு  தன்னுடைய எதிரியான பரந்தாமனிடம் மகன் பிரகலாதன் வைத்திருந்த பக்தியைக் கண்டு கோபம் கொண்டான், மகனைக் கொல்ல முடிவு செய்து, தங்கை ஹோலிகாவிடம், பிரகலாதனைக் கொல்லும்படி கட்டளை இட்டான். அவளும் பிரகலாதனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, அக்னி குண்டத்தில் இறங்கினாள். ஆனால், ஹோலிகாவின் தர்மத்துக்கு விரோதமான செயல் கண்டு கோபம் கொண்ட அக்னி பகவான் ஹோலிகாவை சுட்டுப் பொசுக்கிவிட்டு பிரகலாதனைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டினார். ஹோலிகா அக்னிபகவானால் அழிக்கப்பட்ட நாளையே மக்கள் ஹோலி பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

- எஸ்.ராஜன், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு