Published:Updated:

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால்,அது குறித்து  பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எ‌ன்று‌ முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா  தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பொங்கல் பண்டிகைக்காக, தமிழகம் முழுவதும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 5  ஆயிரத்து 612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள  முதலமைச்சர் ஜெயலலிதா,பொங்கல் பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகள் அதிக  கட்டணம் வசூலித்தால்,அதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எ‌ன்றும்  அறிவித்துள்ளார். 

##~~##
அதற்கு ஏதுவாக, சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு  போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் 044 -  2479 4709 என்கிற‌ தொலைபேசி எண் ஒதுக்கப்படுகிறது.
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.