Published:Updated:

பொங்கல் பண்டிகை: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட  பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி

 
தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு- பொங்கல் திருநாள்! இந்நன்னாளை உற்றார், உறவினர், நண்பர்களின் வாழ்த்தொலி முழங்கக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட அருமைத் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
 
தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல்; கழக அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை,மேட்டூர் அனல் மின்நிலையப் பணிகளை விரைவுபடுத்திச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளாமையால் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் முடங்கி தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும், அனைத்துப் பொருள்களின் விலைவாசிகளும் வெகு வாக உயர்ந்து எல்லா வகையிலும் தமிழக மக்கள் அல்லப்படுகின்றனர்.
 

##~~##
இந்த நிலையை எண்ணும்போது இதயம் விம்முகிறது. இரு விழிகளிலும் நீர் அருவியாகிறது.எனினும், புலரும் புத்தாண்டு கைகொடுக்கும்! இளம் தளிர்கள் எழுச்சி பெறும்! புதிய வாழ்வு உதயமாகும்! எனும் நம்பிக் கையுடன் தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன். 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
 
இயன்றதைச் செய்வோம்,இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் இருப்பவர்கள், இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
 
இந்த பொங்கல் திருநாள் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்வில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும். இந்த பொங்கல் புதுநாளில் உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும், வளர்த்த பெற்றோர்களுடனும், வளர்ந்து வரும் பிள்ளைகளுடனும் சேர்ந்து, கலந்து உறவாடி, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
 
உழைத்த உழைப்புக்கு பலன் பெற்று வெற்றிக்கு துணையாக இருந்த மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கிற நாள் தை திருநாள்.
 
காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கிற டெல்டா விவசாயிகளின் துயர் தீரவும், தமிழகம் முழுவதும் மத்திய அரசு தீட்டுகிற திட்டங்கள் செம்மையாக சென்றடைந்து தமிழக மக்கள் வாழ்வுயரவும், இத்தைத் திருநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என் மனம் மகிழ்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்
 
நதிநீர் பெருக்கெடுத்து மணல் கொள்ளை அகலவும், வான்மழை பொய்யாது பெய்து மண்வளம் சிறக்க வும், பொன்விளையும் பூமி அன்னையின் விளை நிலம் விலை நிலமாய் மாறாதிருக்கவும் , உழுகின்ற காளையும் பால தருகின்ற பசு இனமும் மனிதன் பாழ் வயிற்றை பசியாற்றும் கறியா காது காக்கவும், உழுதவர் வாழ்வை உயர்த்தும் நல்அரசு அமையவும், இரவை அகற்றும் இரவியின் அருளும் உலகை படைத்த அன்னை சக்தியின் அருளும் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் கிடைக்க பிரார்த்தித்து அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன்.
 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
 
தரணி வாழ் தமிழர்களது உள்ளத்தில் எரியும் தணல் அணைய எதிர்காலத்தில் சுதந்திர தமிழர் ஈழ விடியல் பிறக்கட்டும். மதுவின் போதையிலும், இலவசத்தின் போதையிலும் சிக்கியுள்ள தமிழகம் அதிலிருந்து மீண்டு பெருமையை நிலை நாட்டும் காலம் மலரும் என்ற நம்பிக்கையோடு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
உழவர்களின் துயரங்கள் அனைத்தும் மார்கழி மாதத்து பனி போல விலக வேண்டும். உலகின் மூத்த குடியான தமிழ்க்குடி அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தை சூழ்ந்துள்ள தீமைகள் அகல வேண்டும். அடுத்த தைத் திருநாளிலாவது மது இல்லா மாநிலமாக தமிழகம் உருவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இலக்குகளை வென்றெடுக்க நாம் அனைவரும் இந்த நன் னாளில் உறுதியேற்க வேண்டும்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
 
பொங்கலைக் கொண்டாடும் உழைக்கும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சாதி-மத ஆதிக்கத்தை வேரறுக்கவும், ஆணாதிக்க ஆணவத்தைத் தகர்த்தெறியவும் உழைக்கும் மக்களாய் இணைவோம் ஒன்றாய்! வாழ்வோம் இணையாய்! என்று இந்தப் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்!
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
 
பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியத் திரு நாடு நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் ஒற்றுமையை, மதச் சார்பின்மையை கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்தி களை முறியடிக்க வேண்டும். அநீதிக்கெதிராக, அக்கிர மத்திற்கெதிராக- மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம்.
 
எத்தகைய சோதனைகளை சந்தித்தாலும் துயர் அகலும் நம்பிக்கையுடன் உழவர் திருநாள் பொங்கல் விழா கொண்டாடிட வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.