Published:Updated:

`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

Published:Updated:
`திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 15,000 பக்தர்களுக்கு அனுமதி!’ - தேவஸ்தானம் இறங்கி வந்த பின்னணி

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில்  மகா சம்ப்ரோக்ஷண வைபவங்கள் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும் என்ற சாஸ்திரப்படி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, `ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 17-ம் தேதி காலை 8 மணி முதல் தரிசனம் செய்யலாம்’ என்றும், `தரிசனம் ரத்துசெய்யப்பட்ட நாள்களில் ஆர்ஜித சேவை, சிறப்பு தரிசனம் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன. மலைப் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுவதால், மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து வர வேண்டாம்' என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்கு பக்தர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் அதிருப்தியைப் பலவாறாகப் பதிவு செய்துவந்தார்கள். 

திருப்பதி கோயிலின் முன்னாள் பிரதான அர்ச்சகரான ரமண தீட்சிதர் ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடுகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார். இந்த நிலையில் இப்படி ஓர் அறிவிப்பு வரவே, `புதையல் எடுக்கத்தான் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்' எனப் பகீர் குற்றச்சாட்டு ஒன்றைக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே,  `ரமண தீட்சிதர் கூறியவதில் உண்மை இருப்பதாகத்தான் நான் சந்தேகப்படுகிறேன். கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவேன்’ என நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா கூறினார்.  

இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும்விதமாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர், திருமலை திருப்பதி தேவஸ்தானம், கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்டிருந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றது.

`சம்ப்ரோக்ஷணத்தின்போது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.`கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில், எந்த வழிமுறையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பது குறித்த தங்களின் மேலான கருத்துகளை வருகிற 23-ம் தேதி வரை தெரிவிக்கலாம். தேவஸ்தானம் திறந்த மனதுடன் பக்தர்களின் கருத்தைக் கேட்டறிய காத்திருக்கிறது’ என்று கோயில் நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்திருக்கிறார். 

திருப்பதி கும்பாபிஷேகத்தில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி பக்தர்களிடமே கருத்து கேட்க  தேவஸ்தானத்தின் கால் சென்டர் தொலைபேசி எண்களான  0877-2233333, 2277777 ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இவற்றில் பக்தர்கள் தொடர்பு கொண்டு தங்களின் கருத்துக்களைக் கூறலாம்.  இவைத் தவிர 93993-99399 என்னும் வாட்ஸ் அப் எண்ணிலும் பக்தர்கள் கருத்துத் தெரிவிக்கலாம்.  இவற்றுடன் 18004254141, 180042533333 ஆகிய இலவச அழைப்பு எண்கள் அல்லது helpdesk@tirumala.org என்ற இணைய தள முகவரியிலும் பக்தர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தலைமை பட்டாச்சார்யார்  பார்த்தசாரதியிடம் பேசினோம்.

``திருப்பதியில் 2006-ம் வருடம் நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷணத்துக்கு நானும் போயிருந்தேன். அப்போதும் இதேபோன்ற நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. மேலும், அப்போதெல்லாம் இந்த அளவு மீடியாக்களின் தாக்கம் இல்லை.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் இந்த அளவுக்குக் கிடையாது. மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றதே இங்கிருக்கும் பலருக்கும் தெரியாது.  

இங்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மகா சம்ப்ரோக்ஷணத்தின்போதும் சேவார்த்திகள் (பக்தர்கள்) உள்ளே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் நேரத்தில் அப்படி அனுமதித்தால், நெரிசலின் காரணமாகத் தள்ளுமுள்ளு ஏற்பட்டு விரும்பத்தகாதச் சம்பவங்கள் நடைபெறக்கூடும். 

பகவானுக்குக் செய்யும் வைதீக காரியங்களின்போது தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, மனவருத்தம் தரும் சம்பவங்கள் நடந்தால், அது உலகத்துக்கும் உலக மக்களுக்கும் நன்மை தருவதாக அமையுமா என்பதை எல்லாரும் நினைத்துப் பார்க்க வேண்டும். 

சம்ப்ரோக்ஷண நாளன்றே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சம்ப்ரோக்ஷணம் நடைபெற்ற தினத்திலிருந்து 45 நாள்கள் வரை அதன் ஆகர்ஷண சக்தி அங்கேயே நிறைந்திருக்கும். அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நாம் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்'' என்றார் பார்த்தசாரதி.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism