தடாக பிரதிஷ்டை

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்மர் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் மகிமை மிக்கது.

வைகானச ஆகமத்தின்படி மேற்கே அமையும் திருக்குளம் நர்மதை என்றும், கிழக்கே அமைவது கங்கை என்றும் போற்றப்படும். ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக இரண்டு நதிகளும் இத்தலத்தின் திருக் குளத்தில் சங்கமித்ததாக ஐதீகம். காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்ட இந்தத் திருக்குளம், ஸ்ரீநரசிம்மரின் திருவுள்ளப்படி புனரமைக்கப்பட்டு, வரும் 19.1.18

வெள்ளிக்கிழமை அன்று காலை 10.04 முதல் 10.24 மணிக்குள் தடாக பிரதிஷ்டை வைபவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு நரசிம்மரின் திருவருளைப் பெற்று வரலாம்.

தைப்பூசத்தன்று பழநி முருகன்கோயிலில்...

பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25 அன்று தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30-ம் தேதியும், தேரோட்டம் ஜனவரி 31-ம் தேதி தைப்பூச தினத்தன்றும் நடைபெறவுள்ளன.

31.1.18 அன்று மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளதால், பழநி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தேரோட்டம் அன்று காலை, பகல் 11.00 மணிக்குத் தொடங்கவுள்ளது.