Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்!

ராமேஸ்வரத்தில் மாசிப் பெருவிழா!

ரா
மேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரி பெருந்திருவிழா கொடியேற்றம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியன்று நடைபெற்றது.  

விழாக்கள்... விசேஷங்கள்!

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பிப்ரவரி 13-ம் தேதி இரவு, மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவு, சுவாமி-அம்பாள் வெள்ளிரதத்தில் ரதவீதிகளில் உலா வருவர். மறுநாள் காலை 9 மணிக்கு, மீன லக்கினத்தில் சுவாமி - அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 

விழாக்கள்... விசேஷங்கள்!

15-ம் தேதி, மாசி மகா அமாவாசை தினத்தில் பகல் 1 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்தத்துக்கு எழுந்தருள, தீர்த்த வாரி வைபவம் நடைபெறும்.

- இரா.மோகன் படம்: உ.பாண்டி  

குமார கார்த்திகை விழா!

கத்திய மாமுனிவர் `ஈ’ வடிவம் கொண்டு வழிபட்ட திருஈங்கோய் மலை திருத்தலம், திருச்சி-சேலம் சாலையில், முசிறியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ளது. ஸ்ரீமரகதாம்பிகையுடன் ஸ்ரீமரகதஜலேஸ்வரர் அருள்பாலிக்கும் இந்தத் தலம் நக்கீரர், அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்புக்குரியது.  இங்கே, அம்மைக்கும் அப்பனுக்கும் நடுவே ஞான ஸ்கந்தராக அருள்பாலிக்கிறார் பாலதண்டாயுத சுவாமி.   

விழாக்கள்... விசேஷங்கள்!

இத்தலத்தில் மகாசிவராத்திரியன்று (13.2.18) காலை 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

22.2.18 வியாழக்கிழமை அன்று பாலதண்டாயுத சுவாமிக்கு குமார கார்த்திகைத் திருவிழா நடைபெற வுள்ளது. இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு மேல் 11:30- மணிக்குள் மலைக்குமேலுள்ள முருகனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். இரவில் முருகன் திருவீதியுலா வருவார்.

ஆன்மிக அன்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு, இறையருள் பெற்று வரலாம்.

- குமார கார்த்திகை விழாக் குழுவினர், திருஈங்கோய்மலை

உவரியில் தேர்த் திருவிழா!

தே
ர்த் திருவிழா- ஊரின் ஒற்றுமைக்கான வைபவம் இது. தேரை நகரும் கோயில் என்பார்கள் பெரியோர்கள். ஆமாம்! தன்னை நாடிவந்து தரிசிக்க இயலாத பக்தர்களை இறைவனே தேடிவந்து அருளும் உன்னத வைபவம்தான் தேரோட்டம்.

சிவபெருமான் முப்புரம் எரித்த திருக்கதை தெரியும் அல்லவா?

தவத்தின் பலனாகத் தாங்கள் பெற்ற பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளால் உலகைத் துன்புறுத்திவந்த தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் ஆகிய மூன்று அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார் சிவபெருமான். பூமியைத் தேரின் தட்டாகவும், வானத்தை விதானமாகவும், சூரிய-சந்திரர்களைச் சக்கரங்களாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும் கொண்டு மாபெரும் தேர் உருவாக் கப்பட்டது. பிரம்மதேவன் தேரின் சாரதியானார். மேரு மலையே வில்லாக, அதன் நாணாக வாசுகிப் பாம்பு திகழ, விஷ்ணு அஸ்திரமாக, அஸ்திரத்தின் நுனியில் அக்னி திகழ்ந்தது. சிவனார் தேரில் ஏறினார்.

இப்போது தேவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு சிந்தனை தோன்றியது; நாம் இல்லாமல் சிவனாரால் அசுரர் சம்ஹாரத்தை நிகழ்த்த முடியாது என்று. இதையறிந்த சிவனார், அவர்களது அறியாமையை நினைத்துப் புன்னகைக்க, அந்தச் சிரிப்பிலேயே முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின என்கின்றன புராணங்கள். திருமூலர் இந்தக் கதையின் மூலம் மிக அற்புதமான தத்துவத்தை விளக்குகிறார்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே
ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்று மலங்களிடம் சிக்கியுள்ள உயிர்களை மீட்டு அழியாத முக்தி இன்பத்தை இறைவன் தருகிறார். இதையே முப்புரம் எரித்த வரலாறு விளக்குகிறது என்கிறார் திருமூலர். இந்தக் கதையையும் தத்துவத்தையும் நமக்குணர்த்தும் வைபவம் தேரோட்டம்.

மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமித் திருக் கோயிலின் தேரோட்டம் கடந்த 31.1.18 (தை - 18) புதன் கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் தனித்தேரில் பவனிவர, தொடர்ந்து பெரிய தேரினில்  ஸ்ரீசந்திரசேகரரும் ஸ்ரீமனோன்மணியம்மையும் திருப்பவனி வந்தது, கண்கொள்ளாக் காட்சி! மறுநாள் தெப்போற்சவம் நடைபெற்றது. இந்தத் தலத்தில் தெப்போற்சவத்தின்போது, தெப்பத்தின் முன்னே வெள்ளைமீன் ஒன்று  பவனி வரும்; மற்ற நாள்களில் அந்த மீனைப் பார்க்கமுடியாது என்கிறார்கள். இந்த வருடமும் அந்த அதிசய மீனைத் தரிசித்து இன்புற்றார்கள் பக்தர்கள்.

- ஜி.டி.முருகேசன், படம்: விஜய்