கண்ணன் கொண்டாடிய பண்டிகை!

பிரகலாதனை அழிக்க எண்ணிய இரண்ய ஹசிபுவின் சகோதரியான ஹோலிகா, அவனை அழிக்க இயலாமல் பாவத் தீயில் தானே அழிந்து போனாள். இந்தப் புராணச் சம்பவத்தையொட்டி, தர்மத்தைக் காக்க அதர்மத்தை அழிக்கும் இறையருளைப் போற்றும் விதம் கொண்டாடப்படுவதே ஹோலிப் பண்டிகை.
கிருஷ்ணரும் ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய அற்புதத் திருவிழா இது. இந்த வருடம், மார்ச்- 1 வியாழக்கிழமையன்று ஹோலிப்பண்டிகை வருகிறது. இந்நாளில், ஸ்ரீநாராயணரை - கிருஷ்ணபகவானைக் குடும்ப சமேதராகக் கொண்டாடுவது நன்மை பயக்கும்.

மாசி மகா அபிஷேகம்!

தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை செய்யப்படும் மகா அபிஷேகங்கள் விசேஷமானவை. அப்படி அபிஷேகம் நடைபெறும் திருநாள்கள்: மார்கழித் திருவாதிரை, மாசி பூர்வபட்ச சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி பூர்வபட்ச சதுர்த்தசி, புரட்டாசி பூர்வபட்ச சதுர்த்தசி திருநாள். நமது ஒரு வருடகாலம் தேவர்களுக்கு ஒருநாள் பொழுது. இதனடிப்படையில் தேவர்கள் செய்யும் ஆறுகால பூஜைகளே இப்படிச் சிறப்பு பெறுகின்றன என்பார்கள். அவ்வகையில், இந்த வருடத்தின் மாசி மாதம் பூர்வபட்ச சதுர்த்தசி அபிஷேகம், பிப்-28 புதன்கிழமை அன்று நடைபெறும். இந்நாளில் சிவபக்தர்கள் தில்லைக்குச் சென்று அம்பலவாணரைத் தரிசித்து ஆனந்தம் பெறலாம்.

நம்மாழ்வார் ரதோத்ஸவம்!

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆழ்வார்திருநகரி. நம்மாழ்வாரின் அவதாரத் தலம் இது. இந்த ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஆதிநாத பெருமாள் ஆலயம் பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் பராமரிக்கப்பட்டது; சிற்ப சிறப்புகள் நிறைந்தது!

மூலவருக்கு வடக்கில் அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம். அண்ணனின் கட்டளையையும் மீறி, அவரது அறைக்குள் துர்வாச முனிவரை அனுமதித்ததால் ஸ்ரீராமனின் சாபம் பெற்ற லட்சுமணன், இங்கு புளிய மரமாகி நிற்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் இலைகள் ஒருபோதும் உறங்குவதில்லை (மூடிக் கொள்வதில்லை) ஆதலால், ‘உறங்காப் புளி’ எனப் போற்றுவர். திருப்புளி ஆழ்வார் என்றும் போற்றப்படும் நம்மாழ்வார், இதன் அடியில் 16 ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்திருந்தாராம்! ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வாருக்கு,
மார்ச் மாதம் 4-ம் தேதியன்று இந்தத் தலத்தில் ரதோத்ஸவம் நடைபெறவுள்ளது. இந்தத் திருநாளில் ஆழ்வார்திருநகரிக்குச் சென்று ஆதிநாதப் பெருமாளின் அருளையும், ஆழ்வாரின் அனுக்ரகத்தையும் ஒருங்கே பெற்று வருவோம்.

- மு.ஹரிகாமராஜ்