Published:Updated:

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)
மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல்நாள் முயல்வேட்டை திருவிழா நடப்பது வழக்கம். அந்த  திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பெட்டிக்கடை, வீடுகள் தீக்கிரை ஆகின. இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட கல்வீச்சில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தில் மாரியம்மன் கோவிலில் நடந்த முயல்வேட்டை திருவிழாவின்போது லாடபுரம் கிராம இளைஞர்களுக்கும், பாளையம் கிராம இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை லாடபுரத்தில் கோவில் திருவிழாவில் காவடி, எடுத்து அலகு குத்தி வந்தபோது, தகராறு மீண்டும் தொடர்ந்தது. அப்போது ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். பாட்டில்களும் வீசப்பட்டன.

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

இதன் எதிரொலியாக குடிசை வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதில் செல்லசாமி கோஷ்டியை சேர்ந்த தென்னரசு பெட்டிக்கடைக்கும், அண்ணாமலை என்பவரது வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது. பாட்டில்கள் வீசப்பட்டதில் செல்லசாமி, ஜெகன் (23), ராஜா (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதில் வெள்ளையன், மணிவேல், பாண்டுரெங்கன் ஆகிய 3 பேரின் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

பாலமுருகன் கோஷ்டியை சேர்ந்த துரைராஜ் என்பவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. சுப்ரமணி, மாணிக்கம், குமார் ஆகியோரது ஓட்டு வீடுகள் கல் வீச்சில் சேதமடைந்தது. பாலமுருகன் என்பவர் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் லாடபுரம் கிராமமே கலவர பூமியாக மாறியது. பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

மோதலில் முடிந்த முயல் வேட்டை திருவிழா: வீடுகளுக்கு தீ வைப்பு: 28 பேர் கைது (படங்கள்)

இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை சூப்பிரண்டு சுகாசினி, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சர்புதீன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இரு கோஷ்டியினரையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சம்பவ இடத்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராஜசேகரன், தாசில்தார் ரெங்கராஜ் ஆகியோர் பார்வையிட்டு இருதரப்பு மக்களையும் அமைதிப்படுத்தினர். மேலும் இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

##~~##
இந்த சம்பவம் குறித்து செல்லசாமி கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு கோஷ்டியை சேர்ந்த 18 பேரையும், பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த 10 பேரையும் கைது செய்தனர். கைதான 28 பேரும் பெரம்பலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர். 
சி.ஆனந்தகுமார்