Published:Updated:

நாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது?

நாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது?
நாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது?

நாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது?

ம்பிகைதான் ஆதிசக்தி. அவளில் இருந்தே மும்மூர்த்தியரும்,சகல தேவர்களும் தோன்றினர். அவளே இந்தப் பிரபஞ்சம் முழுவதுமுள்ள அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றி அருள்கிறாள். எல்லா நாள்களும் தேவியை வழிபட உகந்த நாள்களே. ஆனால், நவராத்திரி காலத்தில் அம்பிகையை வழிபடுவது மகத்தான நன்மைகளை நமக்கு அருளக்கூடியது.

நவராத்திரி நாள்களில் அம்பிகையை எப்படி வழிபடுவது என்பது பற்றி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடராஜ சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

``நவராத்திரி நாள்களில் பிரதமை முதல் நவமி வரை இந்தந்த தெய்வங்களை இந்தந்த நாள்களில் முறைப்படி வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். முதல் மூன்று நாள்கள் துர்கா தேவியையும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருள் பெறலாம்.

ஒன்பது நாள்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதே போன்று, மகா நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருள்களையும் குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்துவது மிகவும் விசேஷம்.

பூஜிப்பது எப்படி?

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையை அலம்பி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.

அந்த இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். (அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. இது இட வசதிகளைப் பொறுத்து) பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள அகலமும் ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். (அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, நவமணிகளைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து, அதன் மேலாக மட்டைத் தேங்காயை வைத்து பூஜையைத் தொடங்க வேண்டும். வீட்டு சம்பிரதாயம்படி)

நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருள்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா. அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்த பிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும்படியும் மனதார வேண்டிக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்க வேண்டும். சரஸ்வதி அஷ்டோத்திரம் செய்யலாம். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்ய வேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபட வேண்டும். குறைந்தபட்சம் தேங்காய் பழங்களாவது நைவேத்தியம் செய்யலாம்.

பூஜிக்க உகந்த நேரம்:

இந்த ஆண்டு ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18-ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை நல்ல நேரம் உள்ளது. நவமி திதி அக்டோபர் 17-ம் தேதி பிற்பகல் 12.49 மணிக்கு தொடங்கி 18-ம் தேதி 3.28 மணிவரை உள்ளது.

பூஜையின்போது சரஸ்வதி தேவிக்கு உரிய ஸ்துதி மற்றும் குமரகுருபரர் இயற்றிய சகல கலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

சரஸ்வதி ஸ்தோத்திரம்:

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே

நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

ஸரஸ்வத்யை நம:, பாரத்யை நம:, வாக்தேவதாயை நம:, மாத்ருகாயை நம:,

சதுர்முக ப்ரியாயை நம:, ஹம்ஸாஸனாயை நம:, வேதசாஸ்த்ரார்த்த

தத்வஜ்ஞாயை நம:, ஸகல வித்யாதிதேவதாயை நம:

சகலகலாவல்லி மாலை:

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.

சரஸ்வதி பூஜையின்போது "துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. இந்த ஆண்டு ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18-ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை நல்ல நேரம் உள்ளது. நவமி திதி அக்டோபர் 17-ம் தேதி பிற்பகல் 12.49 மணிக்கு தொடங்கி 18-ம் தேதி 3.28 மணிவரை உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு