Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஆழித்தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற ஆழித் தேரோட்டம் கடந்த மே மாதம் 27-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர், தேரடி பிள்ளையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிறைவேறியதும், அதிகாலை 6.40 மணிக்கு மங்கள இசை முழங்க தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. பெரும் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க, தேரின் பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள, ஆழித்தேர் கீழ வீதியிலிருந்து புறப்பட்டு, நான்கு ரதவீதிகளின் வழியாக திருநிலையை அடைந்தது.

விழாக்கள் விசேஷங்கள்!

ஜூன் 9:  திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத் திருவிழா கடந்த மே மாதம் 29-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவுபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக வரும் ஜூன் 9-ம் தேதி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட உள்ளன.

ஜூன் 10 : திண்டிவனம் கீழ்ப்பசார் கிராமத்தில் உள்ள அருள்மிகு மரகதாம்பிகை சமேத அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் சுக்கிர பகவானுக்குத் தனிச் சந்நிதி அமைக்க பூமி பூஜை நடைபெற உள்ளது. சுக்கிரனுக்கென்று வேறு எங்குமே தனி மூலவர் சந்நிதி இல்லை என்பதால், இந்த விழா சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காலை 7.30 மணிக்கு தொடங்கி 9 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.

சபரிமலை நடை திறப்பு: 2018-ம் ஆண்டு ஜூன் 14 முதல் 19 வரை ஆனி மாத பூஜைக்காகவும், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாள்களில் சபரிமலை ஸ்வாமி ஐயப்பனைப் பிரதிஷ்டை செய்த திருவிழாவும் சிறப்பு பூஜைகளோடு கொண்டாடப்படும்.

அண்ணாமலை கிரிவலம்: ஜூன் மாதம் 27- ம் தேதி புதன்கிழமை காலை 9.35 மணி முதல் 28- ம் தேதி வியாழக்கிழமை காலை 10.20 மணி வரை கிரிவலம் வரும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத கிரிவலம் பக்தர்களுக்கு நடராஜரின் அருளைப் பெற்றுத் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு