ஜூலை - 17: தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம்
ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று முதல் சூரிய பகவானின் சஞ்சாரம் தெற்கு நோக்கி அமைகிறது. தெய்விக வழிபாட்டு பண்டிகைகளுக்கு இந்த ஆடி மாதமே தொடக்கக் காலமாகப் போற்றப்படுகிறது. அம்மனைக் கொண்டாடும் இந்த மாதம் மங்கல மாதமாகவும் விளங்குகிறது. பூமாதேவி தோன்றிய மாதம் என்பதால் பூமியின் செழிப்புக்கும் இந்த மாதம் உகந்தது.
ஜூலை 21 - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை
சென்னை-செங்கல்பட்டு சாலையில், சிங்கபெருமாள் கோயிலி லிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது திருக்கச்சூர். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஈஸ்வரன் அன்னமிட்ட திருத்தலம் இது. இங்கே வரும் 21.7.18 சனிக்கிழமை அன்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜை திருவிழா நடைபெறவுள்ளது. அன்று காலையில் அருள்மிகு விருந்திட்டீஸ்வரர், சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் திருக்கயிலாய காட்சி வைபவமும் நடைபெறும். பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெறலாம்.

ஜூலை 23: கோவர்த்தன விரதம்
இந்திரனின் கோபத்தால் பெருமழை பெய்து கோகுலமே மூழ்கும் நிலை உருவானது. ஆபத்பாந்தவனான ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி ஆயர்களையும், ஆநிரைகளையும் பாதுகாத்து அருள்புரிந்தார். இதனால் ‘கோவர்த்தனன்’ என்ற திருநாமத்தையும் பெற்றார். இயற்கையின் சீற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தை, `கோபத்ம விரதம்’ என்றும் போற்றுவர்.
ஜூலை 27 சங்கரன்கோயில் ஆடித்தபசு
ஹரியும் ஹரனும் ஒருவரே என்பதை நிரூபிக்கும் வகையில், அம்பிகை தவமிருந்து சங்கரநாராயணரின் தரிசனம் பெற்ற திருத் தலம் சங்கரன்கோவில். இங்கு ஆடி மாதம் உத்திராட நட்சத்திர தினத்தில் கோமதியம்மனுக்கு ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஜூலை 27 - குரு பௌர்ணமி
விசேஷமாக போற்றப்படும் இதே நாளில்தான் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தார். அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்டுவந்த பரிமுகரை இந்த நன்னாளில் வழிபட்டால், சகல கலைகளும் ஸித்திக்கும்; ஞானம் கைகூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சபரிமலை நடைதிறப்பு: 2018-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படும். 21-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்; ஆடி மாத விசேஷ பூஜைகள் நடைபெறும்.
திருவண்ணாமலை கிரிவலம்: ஜூலை மாதம் 26- ம் தேதி வியாழக்கிழமை இரவு 12.20 மணிக்குத் தொடங்கி 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2.25 மணி வரை கிரிவலம் செய்யலாம். ஆடி மாத கிரிவலம் பக்தர்களுக்கு அம்பிகையின் ஆசியைப் பெற்றுத் தரும்.
தொகுப்பு: மு.ஹரிகாமராஜ்